இலங்கை

இலங்கையில் அதிரடி சோதனைக்கு தயாராகும் அதிகாரிகள்!

  • July 15, 2023
  • 0 Comments

இலங்கையில் பொருட்களின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை பிரிவின் பணிப்பாளர் ரசல் சொய்சா இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும். எனினும், பிரதேச ரீதியாக மக்களுக்கு குறைந்த விலையில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • July 15, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் குறைந்த அம்சங்களைக் கொண்ட அடிப்படை கையடக்க தொலைபேசிகளுக்குத் திரும்புவதாக தெரியவந்துள்ளது. அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதிகளை மட்டுமே கொண்ட இந்த தொலைபேசிகளில் இணையத்தை அணுகும் வசதி இல்லை. கடந்த ஆண்டு இந்த வகை கையடக்க தொலைபேசிகளின் விற்பனை முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மொத்த கையடக்க தொலைபேசிகளில் 8.2 சதவீதம் குறைந்த வசதிகள் கொண்ட கையடக்க தொலைபேசிகளாக அடையாளம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

டுவிட்டர் பயனாளர்களுக்கு வருமானம் – மஸ்க் அதிரடி அறிவிப்பு

  • July 15, 2023
  • 0 Comments

டுவிட்டர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்ட பயனாளர்களுக்கு வருமானத்தைப் பகிர்ந்து தர அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. உலகம் கையடக்கமாக ஆகிவிட்ட காலச் சூழலில், உலக நடப்புகளை தெரிந்துக்கொள்ளும் முன்னணி சமூக ஊடகமாக டுவிட்டர் இருந்துவருகிறது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உலக செல்வந்தரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தைக் கையப்படுத்திய பிறகு அதில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறார். அவருடைய மாற்றங்களாலும் தடாலடிச் செயல்பாடுகளாலும் டுவிட்டர் பயனாளர்கள் கடுமையான அதிருப்தியும் எரிச்சலும் அடைந்துள்ளனர். டுவிட்டரிலேயே எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளைக் […]

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்கும் அமெரிக்கா!

  • July 15, 2023
  • 0 Comments

ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக கப்பல்களை பாதுகாக்க ஹார்முஸ் ஜலசந்தி அருகே எஃப்-16 போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானியப் படையெடுப்புகளில் இருந்து கடல் கப்பல்களைப் பாதுகாக்க F-16 போர் விமானங்களை அனுப்புவதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் மூலோபாய ஜலசந்தியில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை கணிசமாக அதிகரிக்கிறது எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கு முழுவதும் ரஷ்யா மற்றும் சிரியாவுடனான ஆகிய நாடுகளுடன் ஈரான் உறவுகளை வலுப்படுத்தி வருவதால்,பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு […]

கருத்து & பகுப்பாய்வு

ஐஸ்லாந்தில் குடியிருப்பை கண்டுபிடிப்பது எப்படி?

  • July 15, 2023
  • 0 Comments

ஐஸ்லாந்தில் ஒரு அபார்ட்மெண்ட் அல்லது ஒரு அறை கண்டுபிடிக்க பல ஆதாரங்கள் உள்ளன. அவை இணையதளங்கள், பேஸ்புக் குழுக்கள் அல்லது விளம்பரங்களாக இருக்கலாம். நீங்கள் நடந்து சென்று வீடுகள் அல்லது ஏஜென்சிகளில் பலகைகளைத் தேடலாம். மக்களிடமும் பேசலாம். யாரோ ஒருவரை அறிந்திருக்கலாம். ஐஸ்லாந்தில் ஒரு குடியிருப்பை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது நீங்கள் ஐஸ்லாந்தில் வசிப்பவராக இருந்தாலும் அல்லது புதிய வெளிநாட்டவராக இருந்தாலும் ஒத்ததாகும். ஐஸ்லாந்தின் மக்கள்தொகையில் பாதி பேர் தாங்கள் வசிக்கும் இடத்தை சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. ஐஸ்லாந்தில் […]

இலங்கை

தரமற்ற மருந்து தொடர்பில் பல முறை முறைப்பாடு செய்யப்பட்டபோதும் கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்!

  • July 15, 2023
  • 0 Comments

வைத்தியசாலையில், தற்போது மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வைத்தியர்கள் கிடைக்கப்பெற்ற மருந்துகளை உபயோகிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதகாவும், NPP அரசியல் சபை உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், இந்த சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொண்டு அமைச்சரும் அமைச்சு அதிகாரிகளும் தரம் குறைந்த மருந்துகளை கொள்முதல் செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ‘ப்ரோபோஃபோல்’ என்ற மருந்தைப் பயன்படுத்தியதால் சில மரணங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த மருந்து சிக்கலுக்கு வழிவகுத்ததாக பல மருத்துவமனைகள் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஆடைகள் தொடர்பில் மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட தகவல்

  • July 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஆடைகள், காலணிகளை வீசாமல் பழுதுபார்த்துத் தருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பிரான்சில் ஆண்டுதோறும் 700,000 டன் ஆடைகள் வீசப்படுகின்றன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு குப்பை நிரப்புமிடங்களில் குவிகின்றன. காலணியின் குதிகால் பகுதியைப் பழுதுபார்க்க வாடிக்கையாளர்களுக்கு 7 யூரோ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடைகளைச் சரிசெய்து தருவோர் 10இலிருந்து 25 யூரோ வரை பெறலாம் என கூறப்படுகின்றது. இவ்வாண்டு முதல் 2028ஆம் […]

இலங்கை

ஒவ்வாமையால் ஆபத்தான நிலையில், சிகிச்சைப்பெற்றுவரும் மற்றுமொரு பெண்!

  • July 15, 2023
  • 0 Comments

ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றுவலி காரணமாக பேராதனை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவருக்கு Ceftriaxone என்ற ஊசி செலுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அந்த பெண் உயிரிழந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த எதிர்ப்பு ஊசி அனுலாவதி என்ற மற்றொரு பெண்ணுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் தற்போது கொடிய ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கண்டி வைத்தியசாலையில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்கள்

  • July 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்பொழுது குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 80 வீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் குடும்பங்களுக்க இடையேயான வன்முறைகள் அதிகரிக்கப்படுவதாக ஜெர்மனியின் உள் ஊர் அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இவ்வகையான குடும்பங்களுக்கு இடையேயான வன்முறைகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு அதிகரிக்கப்பட்டவர்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களுடைய தொகை 80 சதவீதமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வன்முறைகளின் குற்றவாளிகள் 78 […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

  • July 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் தமிழரான போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், அவரை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஜூலை 12- ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை 5- ஆம் திகதியன்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைப்பின் இயக்குநர் என்னை சந்தித்தார். அப்போது, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதும் மற்றும் வேறு பலர் மீதும் […]

You cannot copy content of this page

Skip to content