உலகம் விளையாட்டு

விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற 20 வயது அல்காரஸ்

  • July 16, 2023
  • 0 Comments

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என […]

இலங்கை செய்தி

யாழில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் புகைப்படம் எடுக்க திரண்ட மக்கள்

  • July 16, 2023
  • 0 Comments

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 இன்று இரண்டாவது நாளாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றது. இதன்போது விருந்தினராக கலந்து கொண்ட சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகள் அரச ஊழியர்கள் என பலரும் முண்டியடித்தை அவதானிக்க முடிந்தது. இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் உடனிருந்தார்.

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ஏவுகணை தாக்குதல்

  • July 16, 2023
  • 0 Comments

இன்று சிந்துவின் காஷ்மோரில் உள்ள இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான வழிபாட்டுத் தலத்தை “ராக்கெட் லாஞ்சர்களால்” ஒரு கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள் இந்து வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்திய இரண்டாவது சம்பவம் இதுவாகும். காஷ்மோரில், கௌஸ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்துக்களுக்கு சொந்தமான கோவில் மற்றும் அதை ஒட்டிய வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். கோவில்கள் மற்றும் வீடுகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூடு சத்தத்திற்குப் பிறகு, காஷ்மோர்-கந்த்கோட் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

  • July 16, 2023
  • 0 Comments

பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஸ்டங்களை எதிர்நோக்கிவரும் சூழ்நிலையில் சுற்றுலாத்துறையினை காரணம்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்களினால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையினை […]

இலங்கை விளையாட்டு

SLvsPAK Test – முதல் நாள் முடிவில் இலங்கை அணி 242/6

  • July 16, 2023
  • 0 Comments

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன்படி, இலங்கை அணியின் முதல் 4 விக்கெட்டுகள் 54 ஓட்டங்களுக்கு சரிந்தது. […]

ஆசியா செய்தி

மருத்துவமனையை விட்டு வெளியேறிய இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீப கற்பகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இன்று கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியது. தென் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான சர்வதேச கடற்பரப்பில் இந்த முத்தரப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. 3 நாடுகளை சேர்ந்த […]

ஆசியா

ஜப்பானில் வெப்பநிலை தாக்கம் அதிகரிப்பு!

  • July 16, 2023
  • 0 Comments

ஜப்பானில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அங்கு Heatstoroke  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடுவதால்,மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். ஜப்பானின் 47 மாகாணங்களில், வெப்ப எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கிழக்கு மற்றும் தென்மேற்கில் உள்ள 20 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோ உட்பட சில இடங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்ததால், உயிராபத்து ஏற்படும் வகையில் அதிகரித்துள்ளதாக […]

ஆசியா

சீனாவிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும்!

  • July 16, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பொதுவான பிரச்சினையாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல், சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில். சீனாவில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். இதன்படி சீனாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது அதிக வெப்ப அலை எச்சரிக்கையாகும். நாட்டின் பெரும்பகுதி அடுத்த வாரம் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் என முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். வடமேற்கு […]

உலகம்

அமெரிக்காவில் 45 நிமிடம் மாத்திரமே பெய்த மழையில் சிக்கி மூவர் பலி!

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் திடீர் என ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒன்பது மாதக் குழந்தையை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 45 நிமிடங்களில் ஆறு அங்குலத்துக்கும் அதிகமான மழை பெய்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று கார்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

  • July 16, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது, இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சகல பாராளுமன்ற கட்சிகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் உதவி செயலாளர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த பிரேரணைக்கு கூட்டு ஆதரவை திரட்டுவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் ஈடுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவித்தார்.

You cannot copy content of this page

Skip to content