இலங்கை

இலங்கையில் சோகம் – நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி மரணம்

  • October 28, 2023
  • 0 Comments

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதி ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார். ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி என்ற 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார். திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் Apple Watch இறக்குமதிகளுக்குத் தடை?

  • October 28, 2023
  • 0 Comments

Apple நிறுவனத்தின் Apple Watch கைக்கடிகாரங்களின் இறக்குமதியைத் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அனைத்துலக வர்த்தக ஆணையத்தால் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கைக்கடிகாரத்தில் தனக்குச் சொந்தமான ரத்த உயிர்வாயு அளவைக் கண்டறியும் ஒளித் தொழில்நுட்பம் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக Masimo Corp மருத்துவ நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. அந்தத் தொழில்நுட்பத்திற்கு Masimo காப்புரிமை பெற்றிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் தடுக்கவில்லை என்றால் ஆணையத்தின் பரிந்துரை 60 நாள்களில் நடப்புக்கு வரும் என்று Masimo கூறியது. Apple நிறுவனத்தின் அத்துமீறல் […]

இலங்கை

கொழும்பில் இன்றும் தீ விபத்து – எரிந்து நாசமாகிய பொருட்கள்

  • October 28, 2023
  • 0 Comments

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று (28) காலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இந்த நிலையில், தீயினால் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய கிழக்கு

மத்திய கிழக்கில் நீடித்த போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

  • October 28, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத […]

விளையாட்டு

உலககோப்பை இந்திய அணிகளின் வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய தோனி!

  • October 28, 2023
  • 0 Comments

2023ம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இம்முறை சொந்த மண்ணில் நடைபெறுவதால், இந்தியாவுக்கு சற்று சாதகமாக உள்ளது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலையிலான இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அணியில் ரோஹித், கோலி, கில், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மோட்டோரோலா அறிமுகம் செய்த அபூர்வ கையடக்க தொலைபேசி

  • October 28, 2023
  • 0 Comments

மோட்டோரோலா சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள போனை நீங்கள் கையில் வளைத்து வாட்ச் போல கட்டிக் கொள்ளலாம். தற்போது மடிக்கக் கூடிய ஸ்மார்ட் ஃபோன்களின் அறிமுகம் மெல்ல மெல்ல வேகமெடுத்து வரும் நிலையில், மோட்டோரோலா நிறுவனம் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் போன் அந்த நிறுவனத்தின் கம்பேக்காக இருக்கும் எனக் கூறலாம். சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான லெனோவோ டெக் வோர்ல்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்

  • October 28, 2023
  • 0 Comments

ஜெர்மனி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை 1949ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக விரைவான வருடாந்திர விகிதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பணவீக்கத்தில் மேலும் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது. அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் ஜெர்மனியில் பொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. பெடரல் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் வரையிலான ஆண்டில் ஜெர்மன் தொழில்துறை பொருட்களின் உற்பத்தியாளர் விலைகள் 14.7 சதவிகிதம் சரிந்தன, மொத்த எரிசக்தி விலைகள் வீழ்ச்சியடைவதால் குறைந்த இழுபறிக்கு […]

ஐரோப்பா

லண்டனில் சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் – படத்தை பகிர்ந்து கோபத்தை வெளியிட்ட பெண்

  • October 28, 2023
  • 0 Comments

லண்டனில் சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் இருந்த புகைப்படம் பேஸ்புக்கில் வைரலாகியுள்ளது. பிரபல உணவகத்திற்கு சென்ற பெண் தனது 3 வயது மகனுக்கு பிடித்த உணவான சிப்ஸை கொள்வனவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் ஆர்டர் செய்த சிப்ஸ் கொண்டுவரப்பட்டது. ஆனால் சிப்ஸ் பாக்கெட்டில் சிகரெட் துண்டு இருந்ததை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடை நிர்வாகியை அழைத்து இந்த சிகரெட்டை எனது மகன் விழுங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று முறையிட்டதோடு தனது ஆதங்கத்தை வெளியிட்டார். உணவு […]

இலங்கை

வானில் ஏற்படவுள்ள மாற்றம் – இலங்கையர்களும் அவதானிக்கலாம்

  • October 28, 2023
  • 0 Comments

இன்று பகுதியளவான சந்திர கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையர்களும் அதனை அவதானிக்கலாம். இன்று இரவு ஆரம்பமாகும் இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை 4 மணி நேரமும், 25 நிமிடங்களும் நிலவும் என ஆர்த்தர் சீ க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த சந்திரகிரகணம் கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்கு தென்படும். இலங்கை நேரப்படி இன்று இரவு 11.31 க்கு இந்த சந்திர கிரணம் ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடத்தின் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுமி உள்ளிட்ட கும்பல்

  • October 28, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிறுவர்கள் கொண்ட கும்பலால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாரிஸில் வசிக்கும் முதியவர் ஒருவரது வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 81 வயதுடைய பெண் ஒருவரது வீட்டிலேயே கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்குள் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு தனியாக வசித்த குறித்த மூதாட்டியை கட்டி வைத்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் […]