இலங்கை

அச்சுவேலியில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்

  • July 19, 2023
  • 0 Comments

அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று இன்றிரவு பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது. முகத்தை துணியால் மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான நந்தகுமார் சுதர்சினி என்பவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

ஐரோப்பா

தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகம் விற்பனை ; 1.8 கோடி அபராதம்

  • July 19, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியின் 2வது மிகப்பெரிய புத்தக நிறுவனம் லிரா கொனுவ். இந்த புத்தக நிறுவனம் ஹங்கேரியின் பல்வேறு நகரங்களில் புத்தக விற்பனை நிலையங்களை திறந்துள்ளது. இந்த புத்தக விற்பனை நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகத்தை விற்பனை செய்ததாக அந்த புத்தக கடைக்கு 27 ஆயிரத்து 500 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 1கோடியே 8லட்சம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஹாட்ஸ்டாபர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் […]

பொழுதுபோக்கு

‘புராஜெக்ட் கே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! வித்தியாசமான தோற்றத்தில் பிரபாஸ்

ரசிகர்களினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. போஸ்டரில் பிரபாஸ் வீர தோரணையில் இருப்பதைக் காட்டுகிறது. அவர் நீண்ட முடி மற்றும் தாடி தோற்றத்துடன் ஒரு சிறப்பு உடையை அணிந்திருந்தார். வரவிருக்கும் படத்தில் பிரபாஸ் அபோகாலிப்டிக் உலகில் மகா விஷ்ணுவின் அவதாரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் கே என்பது வைஜெயந்தி மூவீஸின் 50வது முயற்சியாகும், இது இதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்களில் மிகவும் அதிகமான செலவில் தயாரிக்கப்படுகின்றது […]

இந்தியா

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி! மருத்துவர்கள் விசேட அறிவுறுத்தல்

கடந்த ஜூன் 14-ம் திகதி அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் நேற்று புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை முழுமையாக குணமடையாததால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பழங்களை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதய அறுவை சிகிச்சை […]

இலங்கை

மன்னாரில் நீதிமன்ற சான்று பொருளை திருடி விற்க முயன்ற உத்தியோகஸ்தர் உட்பட இருவர் கைது

  • July 19, 2023
  • 0 Comments

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக காணப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்றைய தினம் புதன் கிழமை(19) காலை மன்னார் நகர பகுதியில் மன்னார் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர் ஒருவர் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருத 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை திருடி இன்றைய தினம் காலை விற்பனைக்காக கொண்டு […]

இலங்கை

வடக்கில் தீவிரமடையும் நோய்! நரம்பியல் வைத்திய நிபுணர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில். ”யாழ்ப்பாணம் அல்லது வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை மூளை சம்பந்தமாக ஏற்படும் மூன்று நோய்கள் பற்றி நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும் குறிப்பாக பக்கவாதம் என்பது பொதுவாக நடுத்தர அல்லது வயது கூடியவர்களிடம் காணப்படுகின்ற ஒரு பொதுவான நோயாக காணப்படுகிறது, யாழ். […]

இலங்கை புகைப்பட தொகுப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

  • July 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா சற்று முன்னர் ஆரம்பமாகியது.   பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் 8 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2,278 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெறவுள்ளனர். இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம், சேர் பொன் இராமநாதன் […]

ஐரோப்பா

ஹீட்ரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கனடியர்?

  • July 19, 2023
  • 0 Comments

கனடாவின் பிரஜை ஒருவரை தீவிரவாத சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வயதான குறித்த கனடியரை ஹீட்ரு விமான நிலையத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் இருந்து புறப்பட்டு ஹீத்ரூ விமான நிலையத்தை அடைந்த நிலையில் சந்தேக நபரை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் இந்த நபருக்கு தொடர்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் […]

இலங்கை

உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

2022 க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஜூலை மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது பரீட்சைக்கான பொருத்தமான விண்ணப்பங்கள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், காலம் முடிந்ததும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

இத்தாலியை வாட்டியெடுக்கும் வெப்பம் ; மக்கள் கடும் அவதி

  • July 19, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும். இந்தநிலையில் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் வாட்டி வதைத்து வரும் வெயில் காரணமாக நீரிழப்பு காரணமாக […]

You cannot copy content of this page

Skip to content