ஆசியா செய்தி

காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் மரணம்

  • October 31, 2023
  • 0 Comments

பாலஸ்தீனப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் காசா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. “50க்கும் மேற்பட்ட தியாகிகள் மற்றும் சுமார் 150 பேர் காயமடைந்தனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்று ஒரு அமைச்சக அறிக்கை கூறியது. முகாமில் உள்ள பல வீடுகளில் இடிபாடுகளில் இருந்து குறைந்தது 47 உடல்கள் மீட்கப்பட்டதை சம்பவ இடத்தில் இருந்து வீடியோ காட்சிகள் […]

விளையாட்டு

CWC – வங்காளதேசத்தை எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான்

  • October 31, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் […]

இலங்கை

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவராக விஷேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். அதிகார சபையின் பணிப்பாளர் சபை இன்று(31) கூடிய போதே சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன், சுகாதார அமைச்சர் நடத்திய கலந்துரையாடலுக்கு அமைய, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல், தரமற்ற மருந்துகளை பயன்படுத்துதல் மற்றும் தரவுகளை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தேசிய […]

பொழுதுபோக்கு

ஆறு மாத காலம் இடைவெளி?? லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் தீர்மானம்.. காரணம் என்ன?

  • October 31, 2023
  • 0 Comments

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த திட்டத்திற்கான ஸ்கிரிப்டை இறுதி செய்வதில் கவனம் செலுத்துவதற்காக சமூக ஊடகங்களில் இருந்து ஆறு மாத இடைவெளி எடுத்து வருகிறார். அவரது அடுத்த படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இதில் ரஜினிகாந்த் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் சூப்பர் ஸ்டார் நடிகருடன் ஒரு மைல்கல்லைக் குறிக்கும். அதன்பின் ‘ரோலக்ஸ்’, ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘லியோ 2’ போன்ற படங்களுடன் சினிமா பிரபஞ்சத்திற்கான திட்டங்களையும் லோகேஷ் […]

இலங்கை

எல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

எல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

ஐரோப்பா

சுவிஸில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு ரயில் பாதைகள் புனரமைக்கப்பட உள்ளன. இதனால் சரக்கு ரயில் போக்குவரத்து அதிகளவில் வரையறுக்கப்பட உள்ளது. தற்காலிக அடிப்படையில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. வாலாயிஸ் கான்டனிலிருந்து இத்தாலியின் மிலான் வரையிலான ரயில் பாதை மூன்று மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.

இலங்கை

“பிரஜா கரசர” தேசிய விருது வழங்கல் நிகழ்வு

கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி “பிரஜா கரசர” தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதேச சமுதாய அமைப்பு (RCBO) மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனையில் சிராஜ் நகர் (CBO) சமுதாய அடிப்படை அமைப்பு மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்ட விருது வழங்கலில் விருதுகள் வழங்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் விருதுகளை பெற்ற உத்தியோகத்தர்கள் நேற்று (30) பிரதேச செயலகத்தில் வைத்து பாராட்டப்பட்டனர். […]

இலங்கை

பீஜி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • October 31, 2023
  • 0 Comments

தெற்கு பசிபிக் சமுத்திர  தீவு கூட்டங்களில் ஒன்றான பீஜி தீவுக் கூட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (31.10) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது,  ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு போன்ற உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இதேபோன்ற அளவிலான நிலநடுக்கம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிஜியில் ஏற்பட்டது.

இலங்கை

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு பதுளை பிரதான புகையிரத விதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இன்று (31) மாலை 4 மணியளவில் இச் சம்பவம் கொட்டகலை. மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து இன்று காலை பதுளை நோக்கி புறப்பட்டு சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. புகையிரதத்தினை தடம் அமர்த்துவதகான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

போலி ஆவணங்கள் மூலம் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள் வெளிநாடு செல்ல தடை!

  • October 31, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான நிறுவன உரிமையாளரும், அதற்கு ஒப்புதல் அளித்த இரண்டு மூத்த அரச அதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பிரேரணையை சமர்ப்பித்ததை அடுத்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நிறுவனத்தின் உரிமையாளரான ‘அருண தீப்தி’ என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம […]