பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி – 50,000 பவுண்ட் அபராதம்
பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு கிட்டத்தட்ட 50,000 பவுண்ட் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பல எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பல வாடகை சொத்துகளுக்கான சட்டத் தேவைகளை கடைபிடிக்கத் தவறிய குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோஸ்போர்த் பகுதியை சேர்ந்த கம்ரன் அடில் என்பவர் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீதான ஒன்பது குற்றச்சாட்டுகளை வீட்டுவசதி சட்டத்தின் கீழ் கொண்டுவர கவுண்டி டர்ஹாம் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், தனியார் வாடகைத் துறையில் நிலைமைகளை […]