செய்தி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பரிதாப நிலை – சர்வதேச ஊடகம் வெளியிட்ட தகவல்

  • November 3, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்குகளை ஏலத்தில் விடுவதற்கான விலை மனுக்கோரல் அழைப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.. 2.9 பில்லியன் டொலர் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களால் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க நாடு எதிர்பார்க்கும் நிலையில், அரச நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளத. இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வில் பணியாளர்கள் அளவிலான உடன்பாட்டைப் பெற்றுள்ளது, ஆனால் அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் […]

இலங்கை

இலங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி பலி!

  • November 3, 2023
  • 0 Comments

மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (02.11) மாலை மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் தபால் கம்பிலிதிகொட புரான் விகாரைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த சாரதியும் பின்சென்ற மகளும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 16 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். சம்பவம் […]

வாழ்வியல்

சூடான நீரில் கொஞ்சம் உப்பு – உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

  • November 3, 2023
  • 0 Comments

சூடான நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவை சீராக்க உதவுகிறது. மனித உடலுக்கு சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மெக்னீஷியம் கொண்ட எலக்ட்ரோலைட் அளவு மிகவும் முக்கியம். உடல் பயிற்சி, உடல் சரியில்லாதபோது, அதிக வெப்ப நிலை நிலவும்போது எலக்ட்ரோலைட் இழப்பு ஏற்படும். இந்நிலையில் சூட நீரில் உப்பு கலந்து குடித்தால், இழந்த எலக்ட்ரோலைட் அளவு மீண்டும் உடலுக்கு கிடைக்கும். ஜீரணத்திற்கு பயன்படும் திரவத்தை சுரக்க உதவும். […]

ஆசியா

இந்தோனேசியாவில் WhatsApp குழுவிலிருந்து விலக்கிய நண்பரை கொலை செய்த நபர்

  • November 3, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் WhatsApp குழுவிலிருந்து தன்னை விலக்கிய நண்பரை நபர் ஒருவர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாண்ட ஏட்ரியன் என்பவரின் உடலே இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. அவரின் உடலில் மூன்று கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன. கத்தி நெஞ்சில் புகுந்து இதயத்தைத் துளைத்த காயம் அவற்றில் ஒன்று என மேற்கு ஜாவா தலைநகர் பாண்டுங்கின் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் காணப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு பொலிஸார் 36 வயது டோட்டோ டொயிபான் எனும் சந்தேக […]

இலங்கை

வடமாகாண வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ள வைத்தியர்களின் போராட்டம்!

  • November 3, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (03.11) வடமாகாண வைத்தியசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று (02.11) அமுல்படுத்தப்பட்டது. இதன்படி, வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மாகாணத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி சப்ரகமுவ […]

இலங்கை

கண்டியில் மரம் முறிந்து விழுந்து விபத்து : ஒருவர் பலி!

  • November 3, 2023
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண்டசாலை பகுதியில் நேற்று (02) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பழக்கடையின் உரிமையாளரும் அவருக்கு உதவியாக இருந்த பெண்ணும் காயமடைந்துள்ளதுடன், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் வாராபிட்டிய குண்டசாலை பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடையவர். மரம் […]

செய்தி

போர்த்துக்கல் சென்ற சுற்றுலா பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 3, 2023
  • 0 Comments

போர்த்துக்கல் சென்ற சுற்றுப்பயணிக்கு மொழி தெரியாமல் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த நபர் மாதுளை பாணம் வாங்க முயற்சித்து சிறை செல்லும் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. போர்த்துக்கல் மொழியில் மாதுளை பாணத்தின் பெயரை அறிவதற்கு அவர் மொழிபெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தினார். உணவக ஊழியரிடம் நபர் பழரசம் கேட்ட போதிலும் பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து அவரை கைது செய்துள்ளனர். ‘மாதுளை’ என்று எண்ணி போர்ச்சுகல் மொழியில் சொன்ன வார்த்தை, உண்மையில் கையெறி குண்டைக் குறிப்பிட்டதை நபர பின்னரே அறிந்தார். […]

ஆசியா

தைவான் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம்!

  • November 3, 2023
  • 0 Comments

தைவான் ஜலசந்தி வழியாக அமெரிக்கா மற்றும் கனேடிய போர்க்கப்பல்கள் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது கூட்டுப் பாதையை கடந்து சென்றதை அடுத்து, தனது துருப்புக்கள் “தொடர்ச்சியான எச்சரிக்கையுடன்” இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. யுஎஸ்எஸ் ரஃபேல் பெரால்டா, அர்லீ பர்க் கிளாஸ் டிஸ்ட்ராப்பர் மற்றும் ராயல் கனேடியன் நேவியின் ஹாலிஃபாக்ஸ் கிளாஸ் ஃபிரிகேட் எச்எம்சிஎஸ் ஒட்டாவா ஆகியவை புதன்கிழமை ஜலசந்தி வழியாக ஒரு “வழக்கமான” போக்குவரத்தை நடத்தியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் 8வது அலை – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • November 3, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றின் 8வது அலை உருவாகி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 23.6 சதவீதம் அதிகரித்துள்ளது. திட்டமிட்டபடி தினசரி தடுப்பூசி செயல்முறைகள் நடைபெற்று வந்த போதிலும், ஆஸ்திரேலியாவில் கொரோனா அபாயம் நீங்கவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், 6,550 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு நாளைக்கு சராசரியாக 936 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய Update

  • November 3, 2023
  • 0 Comments

வாட்ஸ்அப் தனது அடுத்த அசத்தல் அப்டேட்டை தந்துள்ளது. இதன் மூலம் தனது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு டிபி புகைப்படமும், தொடர்பு பட்டியலில் இல்லாதவர்களுக்கு வேறொரு டிபி புகைப்படமும் வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ்அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. […]