ஐரோப்பா

இத்தாலியில் பெருவெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி; அவசரகால நிலை பிரகடனம்

  • November 4, 2023
  • 0 Comments

இத்தாலி டஸ்கனி நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் 6 பேர் பலியானதை அடுத்து வசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அத்துடன் பெருவெள்ளத்தால் வீடுகள் முன் நிறுத்தி வைத்து இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து […]

இலங்கை

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு கூட்டம்

  • November 4, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டம் இன்று (04) மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர் பி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் மட்டக்களப்பு, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது, தொழிற்சங்கத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விடயங்கள் பேசப்பட்டதையடுத்து புதிய நிர்வாகத் தேர்வும் இடம்பெற்றது.இன்றைய கூட்டத்தில் பின்வரும் கூட்டுறவு […]

இலங்கை

நுவரெலியா செல்வோருக்கான விசேட அறிவிப்பு!

  • November 4, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவூடான போக்குவரத்து தடைப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மலைத்தொடர்களின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் டெவோன் மற்றும் செயின்ட் கிளேர் அருவிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அத்துடன் பனிமூட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக நுவரெலியா பயணிப்போர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் […]

உலகம்

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக ஸ்பெயினின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கேனரி தீவுகளின் மேற்குப் பகுதியில் உள்ள எல் ஹியர்ரோ கடற்பரப்பில் நான்கு படகுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு சடலங்களையும் கண்டுபிடித்துள்ளதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. . மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர் என்று ஸ்பெயின் சிவில் காவலர் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பாற்றப்பட்டவர்களில் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

திருகோணமலைக்கு சமயச் சுற்றுலா சென்ற முதியவர்கள்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட முதியவர்கள் இன்று (04) திருகோணமலை மாவட்டத்துக்கு சமயச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். வெருகல் சித்திர வேலாயுத சுவாமி கோவில் ,கங்குவேலி அகத்தியர் தாபனம் சிவன் கோவில், கோணேஸ்வரர் கோவில் ,இலட்சுமி நாராயணன் கோவில்,காளிகோவில் கன்னியா வெந்நீர் ஊற்று முதலிய இடங்களையும் பார்வையிட்டனர் . திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கப் பணிமனைக்கும் முதியோர்கள் வருகை தந்ததுடன் மாவட்டத்தில் காணப்படும் முக்கிய கோயில்கள் குறித்தும் புராண கால வரலாறுகள் […]

இலங்கை

மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் : தயாசிறி ஜயசேகர!

  • November 4, 2023
  • 0 Comments

தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை எனவும் அதனால் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது என்பதுடன் நானும் நிச்சயம் வீதியில் இறங்குவேன் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் அதற்கு சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தற்போதைய அரசு முறையாக செயற்படவில்லை என குற்றம்சாட்டிய தயாசிறி ஜெயசேகர எதிரணிகள் ஒன்றிணைந்து […]

விளையாட்டு

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சிகள் இரத்து!

  • November 4, 2023
  • 0 Comments

2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி அமர்வுகளுக்கு ஒன்றாக வந்திருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் திடீரென பயிற்சி அமர்வுகளை ரத்து செய்துள்ளன. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பங்களாதேஷ் கிரிக்கட் அணி முதலில் தமது பயிற்சியை இரத்து செய்ததாகவும், இலங்கை இன்றைய பயிற்சியை ரத்து செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

உள்ளூர் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க உக்ரைன் முயற்சி

உக்ரைனின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புத் துறைத் தலைவர், உள்ளூர் ஆயுத உற்பத்தியை அதிகரிக்க அயராது உழைத்து வருவதாகவும், நாட்டை மேற்கின் ஆயுத உற்பத்தி மையமாக மாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் மூலோபாய தொழில்துறை மந்திரி, ரஷ்யா தனது நாட்டின் மீது படையெடுத்தல் மற்றும் மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகியவை நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு செலவழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். “உக்ரைனை சுதந்திர உலகின் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுவதில் நாங்கள் உண்மையில் கவனம் […]

இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவி விலகினார்!

  • November 4, 2023
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, இலங்கை அணியின் எதிர்காலம் குறித்து கவலை எழுந்தது. இதனையடுத்து  விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தற்போதைய SLC நிர்வாகத்தை இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.  இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அணியின் வியூகம் மற்றும் தயாரிப்பு, […]

இலங்கை

உணவின் விலையும் அதிகரிப்பு!

  • November 4, 2023
  • 0 Comments

இன்று (04.11) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  ஹர்ஷன ருக்ஷான் இன்று (04.11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேயிலையின் விலை 5 ரூபாவினாலும் பால் தேயிலையின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் […]