ஆசியா

வெடிமருந்து கிடங்காக மாற்றியுள்ள தைவான் – சீனா குற்றச்சாட்டு

  • July 31, 2023
  • 0 Comments

சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன்ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சுமார் […]

மத்திய கிழக்கு

சூடானின் வான்வெளியை தொடர்ந்து மூட நடவடிக்கை!

  • July 31, 2023
  • 0 Comments

சூடான் அதிகாரிகள் தங்கள் வான்வெளியை மூடுவதை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏப்ரல் நடுப்பகுதியில் சூடான் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து சூடானின் வான்வெளியின்  சாதாரண போக்குவரத்துக்கு மூடப்பட்டது. இதன்படி, ஆகஸ்டு 15ஆம் திகதி வரை வான்வெளி மூடல் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மனிதாபிமான உதவி மற்றும் வெளியேற்ற விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என்று சூடான் அதிகாரிகள் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் கூறுகின்றன.

இலங்கை

இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

  • July 31, 2023
  • 0 Comments

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (31.07) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். ஹொரோவ்பதான பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை  ஊழியர் ஒருவரை சில குழுவினர் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்கக் கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி  தம்புள்ளை, கெக்கிராவ, பொலன்னறுவை, கெபதிகொல்லாவ, அனுராதபுரம், ஹொரோவ்பதான, திருகோணமலை ஆகிய பகுதிகளில் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கமால் திடீரென மேற்கொண்ட இந்த பணிப்புறக்கணிப்பினால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இலங்கை

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம்!

  • July 31, 2023
  • 0 Comments

பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் இருப்பதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பள்ளியில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய ஆத்மா அந்த பாடசாலையில் சுற்றிவருவதாகவும் வதந்தி பரவி வருகிறது. அண்மையில் எடுக்கப்பட்ட படம் ஒன்றில் உயிரிழந்த மாணவியின் நிழல் காணப்படுவதாகவும் இப்பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணி வீரர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் வருகையும் […]

இலங்கை

புயலில் சிக்கிய கப்பல் : காப்பாற்ற வந்த கெப்டன்!

  • July 31, 2023
  • 0 Comments

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கக் கப்பல் புயலில் சிக்கிய போது, அந்த  ​​கப்பலை காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்க என்ற கப்டனிடம் ஒப்படைத்ததாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் பொல்கஹவெல தொகுதியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கப்புட்டாவின் கப்பலை புயலில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டதாகவும், தற்போது கப்புட்டாவை தூக்கி கடலில் வீச யாரும் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  […]

இலங்கை

நாமலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சந்தேகம்!

  • July 31, 2023
  • 0 Comments

தோல்வியடைந்த கரிம உரத் திட்டத்தை அமுல்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு போராட்டத்தை முன்னெடுத்த மூன்றாம் தரப்பு ஆலோசனை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹிரியால தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  முன்னாள் ஜனாதிபதிக்கு யார் அந்த அறிவுறுத்தல்களை வழங்கியது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார். யார் என்ன சொன்னாலும் […]

இந்தியா

ஒடிசாவில் மகளை சீரழித்த நபரை அடித்தே கொன்ற தந்தை..!

  • July 31, 2023
  • 0 Comments

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்து வந்தார். இதனிடையே, அந்த நபர் வேலை நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டு […]

ஆசியா

டோக்சுரி புயல்:சீனாவில் 493கோடி அளவில் பொருட்சேதம்

  • July 31, 2023
  • 0 Comments

சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக […]

இலங்கை

தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்

  • July 31, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி இன்றையதினம் திங்கட்கிழமை (31) திருகோணமலையில் காலை 09.30 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயக போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் திருகோணமலையிலும் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப் […]

ஐரோப்பா

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • July 31, 2023
  • 0 Comments

அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் என்று முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வேடேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது எதிர்த் தாக்குதல் தொடுத்து வரும் உக்ரைன் அதில் வெற்றி பெறும் சூழல் வந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர் விடுத்த அறிக்கையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான யுத்தம் வலுத்து வருவதைக் குறிப்பிட்டார். நேட்டோ ஆதரவுடன் உக்ரைனின் தாக்குதல்கள் அதிகரித்தால் ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர […]

You cannot copy content of this page

Skip to content