காதலனுடன் இணைந்து பிள்ளைகளை கடத்திய கனடியதாய்..!
கனடாவில் காதலனுடன் இணைந்து தனது இரண்டு பிள்ளைகளை கடத்தியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த பிள்ளைகளை காணவில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆம்பர் எச்சரிக்கையும் நாடு தழுவிய ரீதியில் வெளியிடப்பட்டிருந்தது. எட்டு வயதான சிறுமி ஒருவரும் 10 வயதான சிறுவன் ஒருவனும் இந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்தனர்.நீண்ட தேடுதல்களின் பின்னர் இந்த இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். […]