பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் கொடுத்த தரமான பதிலடி… படம் வந்தா எப்படி இருக்கும்?

  • August 1, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் ரஜினியின் படங்கள் சில வருடங்களாக பெரிய வசூலை தருவதில்லை என்று சிலர் பிரச்சாரம் செய்து வந்தனர். இவருக்கு வயதாகி விட்டது. இனி இவருக்கு படம் நடிக்க முடியாது. இவருக்கு இனி அப்பா, தாத்தா போன் றகதாப்பாத்திரங்கள் தான் சரியாக வரும் என்றும் கூறி வந்தனர். இவருடைய நடிப்பில் இறுதியாக வந்த அண்ணாத்த படத்திலும் இவரது குரலில் நடுக்கம் உள்ளது. வயதானது தெரிகின்றது. ஆகவே இவருக்கு இனி படம் சரிவராது என்றும் […]

ஐரோப்பா

மாஸ்கோவில் அடுத்தடுத்து தாக்குதல்; ரஷ்யா குற்றச்சாட்டு

  • August 1, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் தலைநகரான் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியது. மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரேனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அக்கட்டடம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது என மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். எனினும் உக்ரேனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியதாகவும் ஆனால், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியதாவும் அவர் குறிப்பிட்டார். இக்கட்டத்தின் 21 ஆவது மாடி […]

ஐரோப்பா

நைஜரில் உள்ள பிரஞ்சு குடிமக்களை வெளியேற்ற திட்டம்!

  • August 1, 2023
  • 0 Comments

நைஜரில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று நைஜரில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தூதரகத்தின் கூற்றுப்படி, அவர்களை விமானம் மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. நைஜரில் சமீபத்திய போராட்டங்களின் போது, ​​நைஜரின் பாதுகாப்புப் படைகள் அதிபர் முகமது பாசுமின் ஆட்சியில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் நைஜரில் ஏற்கனவே போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை!

  • August 1, 2023
  • 0 Comments

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தூண்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கு உண்மைகளை விளக்கிய பின்னரே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா

மஹாராஷ்டிராவில் கிரேன் வீழ்ந்து 17 பேர் பரிதாபமாக பலி!

  • August 1, 2023
  • 0 Comments

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரில் இன்று அதிகாலை பாரம் தூக்கி (கிரேன்) ஒன்று வீழ்ந்ததால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை மும்பைக்கு வெளியே சம்ருதி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த பாரம் தூக்கியொன்றே வீழந்துள்ளது. இதனால், நிர்மாணத்துறை ஊழியர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாரிய கொங்கிறீட் மீது கிரேன் வீழ்ந்ததாகவும், அதன் சிதைவுகள் ஊழியர்கள் மீது வீழ்ந்ததாகவும், மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

13வது திருத்தம் குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

  • August 1, 2023
  • 0 Comments

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ​அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில், அடுத்தவார பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி விசேட கூற்​றொன்றை விடுத்து உரையாற்றவுள்ளார்.

வட அமெரிக்கா

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவில் முத்தரப்பு உச்சிமாநாடு

  • August 1, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18ம் திகதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் […]

இலங்கை

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்!

  • August 1, 2023
  • 0 Comments

கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 100 ரூபாவினால் குறைக்க உள்ளூர் கோழி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை

மின் உற்பத்திக்கு நீர் வழங்குவதில் சிக்கல்!

  • August 1, 2023
  • 0 Comments

தற்போது நிலவும் மழையில்லாத காலநிலை காரணமாக சமனல குளத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ஆனால் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அவசரமாக கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை

அஸ்வெசும திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!

  • August 1, 2023
  • 0 Comments

அஸ்வெசும சமூக நலப் பயன் திட்டத்தின் கீழ் சலுகைகளை உடனடியாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி  நலன்புரிப் பலன்கள் வாரியம் நிவாரணத் திட்டத்திற்கு ஆரம்ப சுற்றில் 1 792,265 பயனாளிகளைத் தேர்வு செய்துள்ளது. மேலும் மேல்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் எதுவும் பெறப்படாத 1,588,835 பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content