வட அமெரிக்கா

ஒரே ஆண்டில் 70,000 அமெரிக்கர்களை காவு வாங்கிய சீனாவின் போதைப்பொருள் – புதிய ஒப்பந்தம்!

  • November 20, 2023
  • 0 Comments

சீனாவில் இருந்து அதிக ஆபத்தான போதை மருந்தான ஃபெண்டானில் புழக்கம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. கடந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவில் ஃபெண்டானில் (fentanyl) போதை மருந்து காரணமாக 70,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் சீனா நடவடிக்கை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா அதன் தடயவியல் அறிவியல் கழகத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் வரை ஃபெண்டானில் குறித்த பேச்சுக்களை நடத்த சீனா மறுத்து வந்தது. தற்போது ஜோ பைடன் […]

இலங்கை

இலங்கையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை!

  • November 20, 2023
  • 0 Comments

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்காலத்தில் சதொச மற்றும் கூட்டுறவு அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யப்படும் ப்ரவுன் சீனியை 275 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை

யாழ் சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி ; பொலிஸார் இருவருக்கு இடமாற்றம்!

  • November 20, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிய முடிகிறது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் […]

இலங்கை

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பகுதியில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு பாதுகாப்பு வேலிகள் கொண்டு வரப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு […]

இலங்கை

வடமாகாணத்தில் இளையோர் பிரச்சினையை ஆராய குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை!!

  • November 20, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதாகவும், இவற்றை ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில், சிறந்த சமூக கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் எனவும்  அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை ஏற்றுக்கொண்ட வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இளையோர் மற்றும் கட்டிளம் பருவத்தினரின் தகாத செயற்பாடுகளால் சமூக மட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்தார். வட மாகாணத்திலுள்ள கல்வி, சுகாதாரம்,மகளிர் […]

உலகம்

சாய்ந்த கோபுரத்தில் பாலஸ்தீனக் கொடியை பறக்கவிட்டு போராட்டம்

காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சைக் கண்டித்தும், போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் போராட்டத்தை நடத்திய ஆர்வலர்கள், இத்தாலியில் உள்ள பைசாவின் சாய்ந்த கோபுரத்தில் இருந்து மிகப்பெரிய பாலஸ்தீனக் கொடியைத் தொங்கவிட்டுள்ளனர். நவம்பர் 17 வெள்ளியன்று நடந்த போர்நிறுத்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொடி தொங்கவிடப்பட்ட இடத்தில் இருந்து கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிற புகையையும் வெளியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை

ஆபத்தான நிலையில் உள்ள வட்டுவாகல் பாலம் : மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

  • November 20, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பாலமானது சேதமடையும் பொழுது தற்காலிகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றதே தவிர   நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது பாலத்தின் மையப்பகுதியில் பாரிய உடைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் பாரிய குழியும் காணப்படுகின்றது. அத்துடன் குறித்த பாலத்தின் பல்வேறு இடங்களில் வெடிப்புகளும், பாதுகாப்பு அற்றதாகவும், சில பகுதிகள் தாழிறங்கியும் காணப்படுகிறது.  இது குறித்து சம்பந்தப்பட்ட […]

இலங்கை

இலங்கை நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

  • November 20, 2023
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (20.11) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதன்போது பேசிய சபாநாயகர்,  நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது வேறு வெளியாட்கள் யாரும் கூட்ட அறைக்குள் நுழைய முடியாது என்று குறிப்பிட்டார். குழுத் தலைவர்கள் குழுவில் பணிபுரியும் வரம்பிற்கு அப்பால் செல்வது தொடர்பில் தமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தின் மரபுகளை நீண்டகாலமாகப் பேணிக் காக்கும் வகையில் செயற்படுவதற்கு அனைத்துக் குழுத் தலைவர்களும் நிலையியற் […]

இலங்கை

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் மீள இன்றைய தினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி […]

இலங்கை

யாழில் கேரளா கஞ்சா மீட்பு: பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் காரைநகரில் நூறு கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா, இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.