இரட்டைக் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றம் முன்வைக்கும் ஜேர்மன் அரசு
டிசம்பர் 1ஆம் திகதி, ஜேர்மன் அரசு, இரட்டைக் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றம் முன்வைக்க உள்ளது. இம்மாதம் நவம்பர் 9ஆம் திகதி மசோதா முன்வைக்கப்பட இருந்த நிலையில், ஒரு கட்சியினர் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில் யூத வெறுப்பு குறித்த கேள்வியை எழுப்பியதால் அது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது, டிசம்பர் 1ஆம் திகதி, இரட்டைக் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றம் முன்வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், விவாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் இந்த மசோதாவை சட்டமாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.