பொழுதுபோக்கு

மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் பெற்ற சமந்தா? வெளியிட்ட பதிவு

மருத்துவ சிகிச்சைக்காக நடிகை சமந்தா ரூ.25 கோடி பணத்தை நடிகர் ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரியில், “மயோசிடிஸ் சிகிச்சைக்காக ரூ.25 கோடி வாங்கினேனா?. யாரோ தவறான தகவலை உங்களுக்கு தெரிவித்துள்ளனர். என் சிகிச்சைக்காக இதிலிருந்து ஒரு சிறிய தொகையை செலவிடுவது மகிழ்ச்சியே. என்னுடைய வேலையிலிருந்து நான் பெற்ற பணம் மூலம் என்னை நானே கவனித்துக்கொள்ள முடியும். நன்றி. […]

இலங்கை

கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்குமாறு கோரிக்கை!

  • August 5, 2023
  • 0 Comments

பொருளாதார திட்டங்களை மேம்படுத்த மக்கள் கொழும்பில் உள்ள பெறுதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சினமண்ட் கிரான்ட் ஹோட்டலில் இன்று (05.08) முற்பகல் இடம்பெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே நிர்மாணித்து, நகரத்தில் பெறுமதியான காணிகளை முதலீட்டிற்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரம் […]

பொழுதுபோக்கு

ராம் சரண் மகளுக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்த அல்லு அர்ஜுன்….

  • August 5, 2023
  • 0 Comments

கோலிவுட்டில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் தான் ராம்சரண். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் ராம்சரண் தந்தையானது அவருடைய குடும்பத்தை எ மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் மெகா ஸ்டாராக பல ஆண்டுகளாக வலம் வரும் ஒரு சிறந்த நடிகர் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம்சரண் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் உபாசனா என்ற பெண்ணுக்கும் திருமணம் […]

இலங்கை

தாடி காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதித்த கிழக்குப் பல்கலைக்கழகம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தாடி காரணமாக விரிவுரைகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அப்துல் ரஹீம் மொஹமட் என்ற மாணவர் சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆசியா

தொடர் மழையால் சிரமங்களை எதிர்நோக்கும் சீனா : 140 மில்லியன் மக்கள் வெளியேற்றம்!

  • August 5, 2023
  • 0 Comments

டோக்சுரி சூறாவளி  சீனாவை நோக்கி நகர்வதால்  சீனாவின் பெரும்பாலான நகரங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக  10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெய்ஜிங்கில், குறைந்தபட்சம் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது, சூறாவளியின் எச்சங்கள் அதிக மழையைக் கொண்டு வருவதாக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள முலிங் நதியின்  நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடும் மழைகாரணமாக சீனாவில் […]

பொழுதுபோக்கு

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பார்க்க விடுமுறை அறிவித்த தனியார் நிறுவனம்

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று ‘ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10ம் திகதி விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் […]

ஐரோப்பா

ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றது!

  • August 5, 2023
  • 0 Comments

கெர்ச் பாலம் அருகே ரஷ்ய டேங்கர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய பாதுகாப்பு சேவை, “வெற்றிகரமான சிறப்பு நடவடிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் இருந்து 17 மைல் தொலைவில் உள்ள இரசாயன டேங்கர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே இரவில் தாக்கப்பட்ட டேங்கர் “ரஷ்ய கூட்டமைப்பின் மிகவும் சக்திவாய்ந்த எண்ணெய் டேங்கர்களில் ஒன்று” என்று கூறப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ஜப்பானில் விடுமுறையை கழிக்கும் காயத்ரி… நீச்சல் உடையில் சூப்பர் படங்கள்….

  • August 5, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். மேலும் விக்ரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பும் பேசும் படியாக இருந்தது. இவருக்கு […]

இலங்கை

குப்பைகளை எரிக்க சென்ற வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பொல்பிதிகம நாகொல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். கலபிடமட, பொல்பதிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டு குப்பைகளை எரித்து கொண்டிருந்த போது அருகில் இருந்த மரம் ஒன்றில் தீ பரவியுள்ளதை தொடர்ந்து குறித்த தீயை அணைக்க முயன்றுள்ளார் அதன்போது அவரது ஆடையில் தீப்பிடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மின் துண்டிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை!

  • August 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை அன்டோனி புயல் தாக்கியுள்ள நிலையில், காலநிலை குறித்த முன்னறிவிப்புகளை MET OFFICE வழங்கியுள்ளது. இதன்படி பிரித்தானியாவில் கோடைக்காலத்தில் அரிதாக பெயக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பலத்த காற்று ஏற்படும் எனவும் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. மேலுமு் தென்மேற்கு வேல்ஸிற்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இங்கிலாந்து, இங்கிலாந்தின் தெற்கு பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You cannot copy content of this page

Skip to content