உலகம்

இத்தாலியின் சார்டினியா தீவில் காட்டுத் தீ பரவல்! 600க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

இத்தாலியின் சார்டினியா தீவில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மத்திய தரைக்கடல் தீவான சர்டினியாவில் 50க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவி வருகின்றன, பலத்த காற்று காரணமாக தீயை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளை சிக்கலாக்குகிறது 1,100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 14 நீர் சுமந்து செல்லும் விமானங்கள் மத்திய போர்ச்சுகலில் உள்ள காஸ்டெலோ பிராங்கோ பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடுகின்றனர். அதே நேரத்தில் உள்ளூர் அதிகாரிகள் காற்றின் […]

இலங்கை

இரு வாரங்களில் அமுலுக்கு வரவுள்ள தடை உத்தரவு

  • August 7, 2023
  • 0 Comments

அடுத்த இரு வாரங்களில் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(06) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஆசியா

சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – நால்வர் பலி

  • August 7, 2023
  • 0 Comments

சிரியாவில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. சிரிய அதிபர் பஷீர் அல் அசாத் தலைமையிலான அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. உள்நாட்டுப்போரில் அதிபர் அசாத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், ஈரான் ஆதரவு குழுவினர் சிரியாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் சிரியா-இஸ்ரேல் எல்லையோரம் இருந்தவாறு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை தடுக்க சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் எல்லைக்குள் […]

இலங்கை

பம்பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு !

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (07) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், பம்பலப்பிட்டி, மரைன் டிரைவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ரஷ்யா!

  • August 7, 2023
  • 0 Comments

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (07.08) வெளியானது. இதன்படி லூனா -25 என்ற லேண்டரை சோயுஸ் என்ற ரொக்கெட் மூலம் ஏவவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த ரொக்கெட்டானது வரும் 11 ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1976 க்குப் பிறகு மொஸ்கோவின் முதல் சந்திரப் பயணமாக இது இருக்கும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

உலகம்

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்க மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள டிக்லிபூருக்கு வடக்கே 150 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா

வெளிநாடு ஒன்றில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயம்!

  • August 7, 2023
  • 0 Comments

அவுஸ்ரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திஷாந்தன் என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் இருந்தாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம்

நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக இறங்கும் வாக்னர் குழு- நீடிக்கும் பதற்றம்!

ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ள நிலையில், இப்போது முழு உலகத்தின் பார்வையும் மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் மீது உள்ளது. ஏனெனில் இந்த தலைவர்கள் நைஜரில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர். நைஜரின் புதிய ராணுவ ஆட்சியினராக சிறை வைக்கப்பட்டுள்ள அதிபரை விடுவிக்காவிட்டால், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் ஆட்சியை திரும்ப ஒப்படைக்கத் தவறினால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு […]

இலங்கை

விவசாயத்திற்கு நீரை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

  • August 7, 2023
  • 0 Comments

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்று வழிகளைக் கண்டறிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விடுவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

மொட்டை தலையுடன், கையில் துப்பாக்கி… ஜவான் ரிலீஸ் திகதி அறிவிப்பு

  • August 7, 2023
  • 0 Comments

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என இந்தி சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை ஷாருக்கான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். மேலும் அட்லி இந்த படத்தின் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். விஜய் சேதுபதி, ஹிந்தியில் நெகட்டிவ் ரோலில் […]

You cannot copy content of this page

Skip to content