முக்கிய செய்திகள்

கமேனியை கொல்ல திட்டமிட்டதை ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

  • June 28, 2025
  • 0 Comments

ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டமிட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் நிலத்துக்கு அடியில் அவர் சென்று பதுங்கினார், என அவர் குறிப்பிட்டுள்ளார். “கமேனி எங்கள் கண்ணில் பட்டிருந்தால் அவரை நாங்கள் நிச்சயம் கொன்றிருப்போம். இதனை அறிந்து கொண்ட அவர், நிலத்துக்கு அடியில் சென்று பதுங்கு குழியில் பதுங்கினார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதில் வந்தவர்களுடனான தொடர்பையும் அவர் துண்டித்து கொண்டார். இதனால், எங்களது முயற்சி சாத்தியம் இல்லாமல் போனது. […]

வட அமெரிக்கா

உச்ச நீதிமன்ற உத்தரவு – டிரம்பின் அதிகாரங்களை மேலும் அதிகரிப்பு

  • June 28, 2025
  • 0 Comments

அமெரிக்க உச்ச நீதிமன்றம், டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி அதிகாரங்களை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, இது டிரம்பின் கொள்கைகளைத் தடுக்க நீதிபதிகளின் திறனைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தரவுகளுக்கு பதிலளித்த டிரம்ப், அரசியலமைப்பு, அதிகாரப் பிரிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றதாகக் கூறினார். தனது நிர்வாகத்தின் போது சரியாக செயல்படுத்தப்பட வேண்டிய சட்ட உத்தரவுகளை மேலும் செயல்படுத்த இப்போது தனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மோசடி செய்பவர்களைப் பிடிக்க AI பயன்படுத்தும் வங்கி

  • June 28, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கி, AI பாட்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசி மோசடியால் மில்லியன் கணக்கான டாலர்கள் இழக்கப்படுவதைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மோசடி செய்பவர்களைப் பிடிக்க வாடிக்கையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் 10,000 AI பாட்களைப் பயன்படுத்த சைபர் புலனாய்வு நிறுவனமான Apate.ai உடன் வங்கி இணைந்து செயல்படுகிறது. Apate.ai நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் டாலி காஃபர் […]

உலகம்

கனடாவில் 4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறைகள் கண்டுபிடிப்பு

  • June 28, 2025
  • 0 Comments

கனடாவில் 4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளில் இது மிகப் பழைமையானவை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கியூபெக் மாநிலத்தில் எரிமலைக்கு அருகிலுள்ள பாறைகள் பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு நிறங்களின் கலவையில் தோன்றுகின்றன. இரண்டு விதமான சோதனைகள் நடத்தப்பட்டதில் அந்தப் பாறைகள் 4.16 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகத் தெரியவந்தது. பூமியின் ஆகத் தொன்மையான மண் படிமம் பாறைகளில் இருப்பதாக Science சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் கூறின. அக்காலக்கட்டத்தில் […]

உலகம்

இந்திய மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே விசேட கலந்துரையாடல்

  • June 28, 2025
  • 0 Comments

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 12 நாள் போர் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக தொடங்கப்பட்ட சிந்து நதி நடவடிக்கை குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர். ஈரானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் ஈரானிய அரசாங்கம் அளித்த ஒத்துழைப்புக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஈரானிய வெளியுறவு அமைச்சருக்கு நன்றி […]

செய்தி

தென்கொரியாவில் ஓடும் மெட்ரோ ரயிலில் தீ வைத்த பயணி – உயிர் தப்பிய 160 பயணிகள்

  • June 28, 2025
  • 0 Comments

தென்கொரியாவில் ஓடும் மெட்ரோ ரயிலில் தீ வைத்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பெட்டியில் பயணி ஒருவர் போத்தலில் இருந்த எரிபொருளைக் கொட்டி தீ வைத்ததால் ரயில்பெட்டி தீக்கிரையானது. ரயில் பெட்டியில் இருந்த 160 பயணிகள் அலறியடித்து ஓடியதில் 23 பேர் காயம் அடைந்தனர். கடந்த மே 31ம் தேதி சியோல் மெட்ரோ ரயிலிலில் நிகழ்ந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. வான் என்ற 67 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

மீண்டும் ஈரானை தாக்குவோம் என டிரம்ப் எச்சரிக்கை

  • June 28, 2025
  • 0 Comments

ஈரானையும் அதன் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். ஈரான் யுரேனிய அளவை மீண்டும் ஆபத்தான அளவுக்கு உயர்த்தினால் அமெரிக்கா இன்னொரு தாக்குதல் நடத்துவதைக் குறித்து யோசிக்கலாம் என அவர் எச்சரித்தார். ஈரானின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் உயிரை விட்டுவைத்துள்ளதாக டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அவருடைய மூன்று அணுச்சக்தித் தளங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. அவருடைய இருப்பிடம் எங்கு இருந்தது என்று எனக்குத் தெரிந்திருந்தது. நான் இஸ்ரேலையோ உலகின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கற்பனையை நிஜமாக்கும் சாட்ஜிபிடி ப்ராம்ப்ட் மாயாஜாலம்!

  • June 28, 2025
  • 0 Comments

உயர் தரமான, போர்ட்ரெட் புகைப்படங்களை உருவாக்க இனி கேமரா, லைட்டிங் செட்டப் அல்லது எடிட்டிங் சாப்ட்வேர் தேவையில்லை. ChatGPT-ல் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன், text prompt கொடுத்து ஸ்டுடியோ தரத்திலான படங்களை உருவாக்க முடியும். அண்மையில், @ruiz.acosta என்ற இன்ஸ்டா கிரியேட்டரின் வைரலான ரீல் ஒன்று, இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வலிமையை நிரூபித்துள்ளது. அந்த வீடியோவில், ChatGPT-யின் இமேஜ் ஜெனரேஷன் அம்சத்தைப் பயன்படுத்தி, மிகவும் தத்ரூபமான பிளாக்&வொயிட் போர்ட்ரெட் ஒன்று AI மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. […]

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

  • June 28, 2025
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை வேகமாகவும், மிகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அது என்னென்ன விதிகள் என்றால், ஓவர் தாமதத்திற்கு தண்டனை (Stop Clock Rule), பந்தில் எச்சில் தடவுவது கூடாது என உள்ளிட்ட பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது. பந்தில் எச்சில் தடவுவது பந்தில் எச்சில் தடவுவது ஏற்கனவே […]

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

  • June 28, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது […]

Skip to content