இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

  • August 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த பகுதிகளுக்கு ஏற்றவிதத்தில் நீர் திறந்து விடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

திடீரென மொட்டையடித்துக்கொண்ட ‘காயத்ரி ரகுராம்’ – வைரலாகும் வீடியோ…

  • August 10, 2023
  • 0 Comments

பிரபல தமிழ் நடிகை காயத்திரி ரகுராம் மொட்டையடித்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காயத்ரி ரகுராம், தனது 14 வயதில் பிரபுதேவா, பிரபு நடித்து வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி சினிமாவில் வலம் வந்த இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் சண்டையிட்டு பல […]

வட அமெரிக்கா

பைடனை மிரட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • August 10, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக இணையவழி அச்சுறுத்தலை விடுத்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. யுட்டாவிற்கு ஜோபைடன் விஜயம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னர் அந்த நபரை கைதுசெய்வதற்காக வீட்டிற்கு எவ்பிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன் போது இடம்பெற்ற சம்பவத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கிரெய்க் ரொபேர்ட்சன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், இணையவழி மூலம் பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிக்கும் எதிராக ரொபேட்சன் […]

உலகம்

அமெரிக்கா – பிரித்தானியாவை அச்சுறுத்தும் “EG.5” – WHO எச்சரிக்கை

  • August 10, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த சூழலில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் EG.5 என்ற புதிய திரிபு பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் பிரிடனில் EG.5 என்ற புதிய கொரோனா திரிபு பரவி வருகிறது. இந்த புதிய திரிபு அபாயகரமானதாக திடீரென தொற்று பரவலையும் உயிர்ப்பலிகளையும் அதிகரிக்கக் கூடியதாக இருப்பதற்கான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி – வேண்டுமென்றே காரை 2ஆம் மாடியில் மோதிய நபர்

  • August 10, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்தில் நபர் ஒருவர் தமது காரை ஒரு வீட்டின் இரண்டாம் மாடியில் மோதியுள்ளார். விசாரணையின்போது அவர் அதை வேண்டுமென்றே செய்ததாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சாம்பல் நிறக் கார் ஒன்று வீட்டின் இரண்டாம் மாடியில் சிக்கிக்கொண்டிருப்பதைச் சம்பவம் குறித்தப் படங்கள் காட்டுகின்றன. சம்பவம் நிகழ்ந்த போது வீட்டில் மூன்று பேர் வரை இருந்தனர். அவர்களுக்குக் காயம் ஏற்படவில்லை. கார் ஓட்டுநர் வீட்டின் கூரையின் மீது ஏறிக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வீட்டின் இடது பக்கத்தில் சாலையின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகிய புதிய வசதி – பயன்படுத்துவது எப்படி?

  • August 10, 2023
  • 0 Comments

மெட்டா CEO Mark Zuckerberg வாட்ஸ்அப்பிற்கான புதிய அம்சத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது தங்கள் திரையை மறுமுனையில் இருப்பவருடன் பகிர இயலும். வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கைப்பற்றியதன் மூலம் பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்கிரீன்-ஷேரிங் என்கிற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. Google Meet மற்றும் Zoom மீட்டிங்குகளில் நாம் செய்வது போல், புதிய அம்சம் பயனர்கள் வீடியோ அழைப்பின் […]

இலங்கை

கொழும்பில் தமிழ் மாணவியின் மாணவியின் உயிரை பறித்த மின்னழுத்தி

  • August 10, 2023
  • 0 Comments

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்னதி மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய சுரேந்திரன் கவிதா என்ற மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

பிரான்ஸில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • August 10, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Isère மாவட்டத்தில் உள்ள Morette நகரில் பெருமளவான கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்குள்ள 375 சதுர மீற்றர் தொழிற்பேட்டைப் பகுதிக்குள் இருந்து ஜோந்தார்மினர் 4.000 கஞ்சாச் செடிகளைக் கைப்பற்றி உள்ளனர். மின்சார உபகரணங்களால் புற ஊதாக்கதிர் (UV) உருவாக்கப்பட்டு மின் வெப்பத்துடன் இந்த கஞ்சாச் செடி வளர்க்கப்பட்டுள்ளது. அதனை வளர்ப்பதற்கு உட்புறத்தில் வளர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்தக் கைப்பற்றலின் பின்னர் நால்வர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனர். இதே […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தாயாரின் காதலனுக்கு இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்

  • August 10, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இளைஞர் ஒருவர் வாகனத்தை ஓட்டி சென்று தனது தாயாரின் காதலனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இவருக்கு தற்பொழுது நீதிமன்றம் தண்டணை வழங்கியுள்ளது. 18 வயதுடைய ஒரு இளைஞர் தனது வாகனத்தினால் தனது தாயாருடைய காதலரையும் மற்றும் அவருடன் வந்த மற்றொரு பெண் ஒருவரையும் தனது வாகனத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். குறித்த இளைஞர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அதாவது […]

இலங்கை

கொழும்பில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

  • August 10, 2023
  • 0 Comments

கொழும்பு மாநகரில் சீருடை அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டை இன்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பான பணம் சேகரிக்க வரும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை இது தொடர்பில் அறிவித்தல் விடுத்துள்ளது. அவ்வாறான அனுமதியற்ற அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார். வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திய பின்னர் 5 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

You cannot copy content of this page

Skip to content