ஐரோப்பா

பிரித்தானியாவில் அலங்காரப் பொருளாக இருந்த வெடிகுண்டு – தம்பதியின் செயலால் அதிர்ச்சி

  • December 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு தம்பதி பல ஆண்டாகப் பழைய வெடிகுண்டு என்ற தெரியாமல் அதனை தங்களின் வீட்டுப் பூங்காவில் அலங்காரப் பொருளாக வைத்திருந்துள்ளனர். ஆனால் அது வெடிகுண்டு எனத் தெரிந்த பின்பும் அதை விட்டுப் பிரிய மனமில்லை சியான், ஜெப்ரி எட்வர்ட்ஸ் தம்பதி என்ற தம்பதி குறிப்பிட்டுள்ளனர். பெம்ப்ரோக் ஷியரை சேர்ந்த அவர்கள் அது பொம்மை வெடிகுண்டு என்று எண்ணியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த வெடிகுண்டைக் பொலிஸ் அதிகாரி ஒருவர் அடையாளம் கண்டார். சென்ற வாரம் அந்த […]

இலங்கை

இலங்கையில் ஜனவரி மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்

  • December 5, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் VAT 18% ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அது நேரடியாக எரிபொருளைப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு – கூகுள் வெளியிட்ட அறிவிப்பு

  • December 5, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT) என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிர்ச்சி – தாயுடன் இறந்து கிடந்த கைக்குழந்தை – ஒரு மாதத்தில் 2வது சம்பவம்

  • December 5, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் தாயுடன் கைக்குழந்தை குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிளாக் 29 கிம் மோ லிங்கில் 34 வயது பெண் மற்றும் மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தை ஒன்றும் இறந்த நிலையில் கிடந்தனர். 3 ஆம் திகதி காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பிளாக் அடிவாரத்தில் பெண்ணும் குழந்தையும் அசைவின்றி கிடந்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரியவந்துள்ளத. இவர்கள் இருவரும், தாய் மற்றும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • December 5, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய அனைத்து முக்கிய நகரங்களிலும் – ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் வீட்டு விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. ஜேர்மன் வீட்டுச் சந்தை முழுவதும் வீடுகளின் தேவை வீழ்ச்சியடைந்து வருவதால், இவ்வாறு விலை குறைவடைந்துள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கான கீல் இன்ஸ்டிடியூட்டின் (IfW) புதிய அறிக்கையின்படி, ஜூலை மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் உரிமையாளர் ஆக்கிரமிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி […]

ஐரோப்பா

பிரான்ஸை அச்சுறுத்திய ஆபத்தான நபர் – 2 வருடங்களின் பின்னர் கைது

  • December 5, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மிக்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு வருடமாக இடம்பெற்று வந்த விசாரணைகளை அடுத்து, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் மிக முக்கிய குற்றவாளியும், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்திக்கொண்டு வரும் குற்றவாளியுமான Mouez K எனும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பரிஸ் […]

இலங்கை

இலங்கையில் சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த 08 ஆம் வகுப்பு தமிழ் மாணவி

  • December 5, 2023
  • 0 Comments

இலங்கையில் இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலையின் 08 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார். அவர் உயர் பெறுபேறுகளைப் பெற்று இந்த பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். கிறிஸ்டின் பிரங்கேஷினி என்ற மாணவி வீட்டில் சுயமாக கல்வி கற்று 2022 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியதோடு ஒரு ஏ சித்தியும், மூன்று பி சித்தியும் ஐந்து சி சித்தியும் பெற்றுள்ளார். அவரது தாயும் தந்தையும் ஆசிரியர்கள் […]

இலங்கை செய்தி

கல்முனை சிறுவன் மரணம் – நன்னடத்தை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்

  • December 4, 2023
  • 0 Comments

கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பெண்னை இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் […]

இலங்கை செய்தி

யாழில் காவல் நிலையம் அருகே வாள்வெட்டு – பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

  • December 4, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிசிரிவி காணொளிகளை கொண்டு வன்முறைக் கும்பலை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு வேளையிலும் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வன்முறைச் சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பில்லை என தெரிவித்து […]

இலங்கை செய்தி

இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் கைது

  • December 4, 2023
  • 0 Comments

போலி வீசாக்களை பயன்படுத்தி கத்தார் டோஹா ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமானப் புறப்பாடு முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ மற்றும் வட்டுபிட்டிவல பிரதேசத்தை சேர்ந்த 25 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அவர்கள் தோஹாவுக்கு புறப்படவிருந்தனர். கட்டார் எயார்வேஸ் அதிகாரிகளுக்கு விமான அனுமதிப் பணிகளுக்காக சமர்பிக்கப்பட்ட […]