இலங்கை

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு இயந்திரங்களை அகற்ற தீர்மானம்!

  • August 14, 2023
  • 0 Comments

வெளிநாடு செல்லும் பயணிகளின் வசதிக்காக பாதுகாப்பு நடைமுறைகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் நுழைவு வாயிலுக்கு அருகில் இருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை அகற்ற தீர்மானித்துள்ளதாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு பயணிகளும் விமானத்தில் ஏறுவதற்கு முன் இரண்டு புள்ளிகளில் சிறப்பு ஸ்கேன் செய்யப்படுவார்கள் என்றும் நிறுவனம் கூறுகிறது. நாட்டில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு […]

பொழுதுபோக்கு

நயன்தாரா – ஷாருக்கானின் ரொமான்டிக் வீடியோ பாடல் வெளியீடு.

  • August 14, 2023
  • 0 Comments

ஷாருக்கான் , நயன்தாரா இணைந்து ஆடியுள்ள ‘ஹயோடா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் தயாராகும் திரைப்படம் ‘ஜவான்’. ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நடிகை தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, பிரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் […]

இந்தியா

மாமியாரின் தகாத உறவை கேள்விகேட்ட மருமகள் குத்திக்கொலை..!

  • August 14, 2023
  • 0 Comments

புதுச்சேரி குருசுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு மகன் முகுந்தன் (24). அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் தேவா (32). இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி கோமதியுடன் (40), தேவாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கோமதி கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இது தேவாவுக்கு சாதகமாக அமையவே கோமதிக்கும் தேவாவுக்கும் கள்ளத்தொடர்பு வலுவானது. இந்நிலையில் கோமதியின் மகள் ரம்யாவை (22) தேவா தனது காமவலைக்குள் சிக்க வைக்க முயற்சி […]

செய்தி

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

  • August 14, 2023
  • 0 Comments

இந்த நாட்களில் மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதால், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளுக்கு மாத்திரமே தண்ணீரை பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மலையகத்தில் உள்ள நீர் பாவனையாளர்களுக்கு நீர் விநியோகம் செய்வதில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படக்கூடும் என சபை விசேட அறிவிப்பில் […]

இலங்கை

அநுராதபுரத்தில் பிரசவத்தின் போது கீழே விழுந்த சிசு மரணம்

  • August 14, 2023
  • 0 Comments

பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (13) உயிரிழந்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைப் பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் குழந்தையைப் பிடிக்க முடியாமல் அது தரையில் வீழ்ந்துவிட்டதாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரேதப் பரிசோதனையில் குழந்தை கீழே வீழ்ந்துள்ளமை […]

வட அமெரிக்கா

கனடாவில் தேசிய கீதத்தின் வரிகள் தொடர்பில் வெடித்துள்ள சர்ச்சை

  • August 14, 2023
  • 0 Comments

கனடாவில் தேசிய கீதத்தின் வரிகள் தொடர்பில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது. ஆங்கிலம் பேசும் கனடியர்கள் மத்தியில் தேசிய கீதத்தின் வரிகள் தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது. “ஓ கனடா” என்னும் தேசிய கீதத்தின் வரிகளை மாற்றி அமைப்பது தொடர்பில் இவ்வாறு முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரபல ஆய்வு நிறுவனமான ரிசர்ச் கோ என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 41 வீதமான அங்லோபோன் கனடியர்கள் “எங்கள் வீடு மற்றும் […]

இலங்கை

இலங்கையில் வெளிநாட்டு வைத்தியர்கள் பணியில் அமர்த்தப்படலாம்!

  • August 14, 2023
  • 0 Comments

வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் அசோக குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் விதித்துள்ள கடுமையான வரிக் கொள்கைகள் மற்றும் நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு […]

பொழுதுபோக்கு

ஹீரோயின்களை மிஞ்சும் கவின் காதலியின் வீடியோ…

  • August 14, 2023
  • 0 Comments

சின்னத்திரையில் பிரபலமாகி பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருவபவர் நடிகர் கவின். இவர் தற்போது மோனிகா என்பவரை காதலித்து திருமணம் செய்ய போகிறார். தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை வருகிற 20ஆம் தேடி கவின் திருமணம் செய்துகொள்ள போகிறார். அவருடைய சில புகைப்படங்கள் கூட ஏற்கனவே இணையத்தில் வெளிவந்து வைரலானது. இந்நிலையில் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு கவினின் வருங்கால மனைவி மோனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ வெளியாகியுள்ளது. […]

செய்தி

அமெரிக்காவில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது!

  • August 14, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானப் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானம் கட்டுப்பாட்டை இழந்து மிச்சிகனில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விபத்திற்கு முன்னர் விமானத்தில் இருந்த விமானிகள் விமானத்தை விட்டு வெளியேறியதாகவும் இதன்காரணமாக உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இலங்கை

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஆகஸ்ட் 14) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. கனேடிய டொலரின் விற்பனை விலை 244.42 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை […]

You cannot copy content of this page

Skip to content