இலங்கை

அம்பாறையில் குப்பைகளை உண்ணவரும் யாணைகளால் விவசாயிகளுக்கு அச்சுறுத்தல்

  • August 16, 2023
  • 0 Comments

குப்பைகளை உண்ண வருகின்ற யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்து உண்டு வருகின்றன. சில வேளை அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதுடன் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்கின்றன.மேற்படி பகுதியில் தினமும் காரைதீவு ,கல்முனை ,அக்கரைப்பற்று, நிந்தவூர், உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து குப்பைகள் வாகனங்கள் மூலம் […]

உலகம்

புர்ஜ் கலிபாவில் லேசர் ஒளியால் ஜொலித்த இந்திய தேசியக் கொடி(வீடியோ)

  • August 16, 2023
  • 0 Comments

துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர். இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நேற்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்திய சுதந்திர […]

பொழுதுபோக்கு

கவர்ச்சி உடையில் வந்த சமந்தாவை அலேக்காக தூக்கி ரொமான்ஸ் பண்ணிய விஜய்… வைரலாகும் வீடியோ

  • August 16, 2023
  • 0 Comments

குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் மேடையிலேயே ரொமான்ஸ் பண்ணி உள்ளனர். நடிகை சமந்தாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் குஷி. ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குஷி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. குஷி திரைப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பாடல்கள் […]

வட அமெரிக்கா

டிரம்ப் 2024ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்குவதில் கடும் சிக்கல்..?

  • August 16, 2023
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் மீது ஜார்ஜியா விசாரணை குழு 98 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி […]

இலங்கை

திருகோணமலையில் வயோதிபரின் மோசமான செயல் – சுற்றிவளைத்த பொலிஸார்

  • August 16, 2023
  • 0 Comments

  திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். கன்தளாய் பிராந்தியத்துக்கு பொறுப்பான குற்றத் தடுப்பு பிரிவினரும் மொரவெவ பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரின் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 25,000 மில்லி லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மஹதிவுல்வெவ -சுவர்ணஜயந்திபுர பகுதியைச் சேர்ந்தவர் (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு […]

அறிந்திருக்க வேண்டியவை

வரலாற்றின் மிக வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு பதிவு

  • August 16, 2023
  • 0 Comments

வரலாற்றில் இவ்வாண்டு மிக வெப்பமான ஆண்டாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு 50 சதவீத சாத்தியம் உள்ளதாக அமெரிக்கப் பெருங்கடல், காற்று மண்டல நிர்வாக அமைப்பு கூறியுள்ளது. வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் 2023ஆம் ஆண்டு முதல் 5 இடங்களில் இடம்பெறும் என்று 99 சதவீதம் உறுதியாகச் சொல்லலாம் எனக் கூறப்பட்டது. மிக வெப்பமான மாதமான ஜூலை மாதம் காணப்படும். கடந்த மாதம் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஆக வெப்பமான ஜூலை என்று அமெரிக்க விண்வெளி […]

பொழுதுபோக்கு

6வது நாளிலும் கொட்டும் பணமழை.. அக்கட தேசத்திலும் பட்டையை கிளப்பும் ஜெயிலர்

  • August 16, 2023
  • 0 Comments

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது ஜெயிலர். 5 நாள் கலெக்ஷனே சுமார் 300 கோடியை பார்த்துள்ள நிலையில், விடுமுறை நாளிலும் திரையரங்கில் 80 சதவீதம் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர். தற்போது இது 400கோடியை நெருங்கி உள்ளது. இத்தகைய கலெக்ஷன் பல பிரமாண்ட படைப்புகளை முறியடித்து சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படத்தின் 6 நாள் கலெக்ஷன் அக்கடதேச படங்களின் கலெக்ஷனை முறியடித்துள்ளது. அந்த வகையில், ஆதிபுருஷ், பொன்னின் செல்வன் 2 போன்ற படங்களின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iPhoneஇல் ஏற்படவுள்ள மாற்றம் – பயனாளர்களுக்கு முக்கிய தகவல்

  • August 16, 2023
  • 0 Comments

iPhone கையடக்க தொலைபேசி யாருடன் அழைப்பில் இருந்தாலும் அதைத் துண்டிக்க, சிவப்புப் பொத்தான் ஒன்று இருக்கும் நிலையில் அதனை மாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக திரையின் கீழ்ப் பகுதியில், நடுவே அந்தப் பொத்தான் இருக்கும். எனினும் இனி அந்தப் பொத்தான், விரைவில் சற்றே இடம்மாறவுள்ளது. மேம்படுத்தப்பட்ட iOS 17 மென்பொருளில், அழைப்புகளை நிறுத்தும் சிவப்புப் பொத்தான் (red end-call button) வலப் பக்கத்துக்கு நகர்த்தப்படும். தற்போது தனியாக இடம்பெறும் ‘அழைப்புகளை நிறுத்தும் பொத்தானுக்கு’ அருகே மற்ற சில பொத்தான்களும் […]

உலகம்

டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட பரபரப்பு – மர்ம பொருள் வெடித்து 10 பேர் பலி

  • August 16, 2023
  • 0 Comments

கரீபியன் தீவுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசின் தலைநகரான சான் கிறிஸ்டோபலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் மர்மபொருள் வெடித்தது. நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஒரு கட்டிடத்தின் உள்ளே நிகழ்ந்த இந்த சக்திவாய்ந்த வெடிப்பை தொடர்ந்து அருகில் இருந்த கடைகளில் தீ பரவியது. இதில், 4 மாத குழந்தை உட்பட 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். 11 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]

இலங்கை

இலங்கையில் மின்வெட்டு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

  • August 16, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது. மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை என்று அமைச்சர் கூறினார். தென் மாகாணம், தேசிய கட்டத்துடன் இணைக்கும் கேபிள் பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் திறக்க முடியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

You cannot copy content of this page

Skip to content