கமராவுக்குள் 2 கிலோகிராம் தங்கம் – வியட்நாமில் பெண்ணை சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி
வியட்நாமுக்குள் கமராவுக்குள் மறைத்து 2 கிலோகிராம் தங்கம் கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் தைவானிலிருந்து வியட்நாமித் தலைநகர் ஹனோய்க்குச் சென்றபோது சம்பவம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கையோடு எடுத்துவந்த பெட்டியைத் தவிர அவரிடம் வேறு எந்தப் பொருள்களும் இல்லை என்று கூறப்படுகிறது. பெட்டி மீது மேற்கொண்ட சோதனையில், அதில் வழக்கமற்ற பொருள்கள் இருப்பதாகத் தெரியவந்தது. விமான நிலைய அதிகாரிகள் பின்னர் பெட்டியை விரிவாகச் சோதித்துப் பார்த்தபோது அதில் 4 கமரா கருவிகளைக் கண்டனர். […]