விளையாட்டு

இந்தியா : தென் ஆப்பிரிக்கா T20 – மழையால் போட்டி ரத்து

  • December 10, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது. போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் […]

ஐரோப்பா

போர்க்கப்பல்களை நோக்கி வந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய பிரான்ஸ்

பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளை செங்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. யேமனின் கரையோரப்பகுதியிலிருந்து வந்த ஏவுகணைகளையே சுட்டு வீழ்த்தியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. செங்கடல் பகுதியில் இயங்கும் லங்குயுடொக் என்ற போர்க்கப்பல் சனிக்கிழமை இரவு இந்த ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியுள்ளது. யேமனின் கரையோரத்திலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவின் டென்னிஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளி;இருளில் மூழ்கிய நகரம்

  • December 10, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் டென்னிஸி நகரைத் தாக்கிய சூறாவளியால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நிலத்தில் தோன்றி நிலத்திலேயே பயணிக்கும் டொர்னாடோ எனப்படும் சூறாவளிகள் உருவாவது வழக்கம். அத்தகைய ஒரு சூறாவளி டென்னிஸி மாகாணத்தில் நேற்று உருவானது. இந்த சூறாவளி அம்மாகாணத்தின் முக்கிய நகரங்கள் வழியாக கடந்த போது, கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சூறாவளி மின்கம்பங்களை சேதப்படுத்தியதால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் – பிரதமர் நெதன்யாகு

  • December 10, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காஸாவில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போரால், காஸாவில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதன் ஒருபகுதியாக […]

ஆசியா

பன்றி இறைச்சி விரும்பி சாப்பிட்டு வந்த நபர்… தலைவலியுடன் மருத்துவரை நாடிய போது காத்திருந்த அதிர்ச்சி!

  • December 10, 2023
  • 0 Comments

சீனாவில் பன்றி இறைச்சி விரும்பி சாப்பிடும் நபர் ஒருவர் தலைவலி மற்றும் வலிப்பு நோய் பாதிப்புடன் மருத்துவரை நாடிய நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நபரின் மூளை உட்பட உடம்பில் இருந்து 700 நாடாப்புழுக்களை மருத்துவர்களை அகற்றியுள்ளனர். கிழக்கு சீனாவின் Hangzhou பகுதியை சேர்ந்த 43 வயது Zhu Zhong-fa என்பவர் ஒரு மாத காலமாக நோய்வாய்ப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இதனையடுத்து Zhejiang பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்களின் சிகிச்சையை நாடியுள்ளார். மருத்துவர் Wang […]

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் அதிக மழையுடனான வானிலையுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத்த மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்கம மற்றும் பொல்கஹவெல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல அம்பன்கங்க கோரலே மற்றும் லக்கல […]

உலகம்

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நர்கஸ் முகமதி: அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற குழந்தைகள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதியின் குழந்தைகள் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அவர் சார்பாக ஏற்றுக்கொண்டனர். ஒஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு சிறையில் அடைக்கப்பட்ட ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு வழங்கப்பட்டது, பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிவதையும், ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்த முகமதி, சிறையில் இருந்த போதிலும் அவரது பல தசாப்தங்களாக செயல்பாட்டிற்காக அக்டோபரில் 2023 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒஸ்லோ சிட்டி ஹாலில் 13:00 மணிக்கு […]

இலங்கை

இலங்கை – கம்பஹா பகுதியில் 175 இலட்சம் பெறுமதியான தங்க பொருட்கள் கொள்ளை!

  • December 10, 2023
  • 0 Comments

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடமான நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை 8.20 மணியளவில் மையத்தை திறக்கும் போது உள்ளே நுழைந்த இருவரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்கப் பொருட்களையும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக அடகுக் கடையின் உரிமையாளர்கள் […]

பொழுதுபோக்கு

மானத்தை வாங்கிய சனம் ஷெட்டி.. கமல் தான் கெஞ்சினாரா?

  • December 10, 2023
  • 0 Comments

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சனம் ஷெட்டி விமர்சித்து வரும் நிலையில், தொடர்ந்து கமல்ஹாசனின் ஹோஸ்ட் சரியில்லை என்றும் விமர்சித்து வருகிறார். இதனால், கடுப்பான மக்கள் நீதி மய்யம் தொண்டர் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி, மக்கள் நீதி மய்யத்தையும் அதன் தலைவர் கமல்ஹாசனையும் டோட்டல் டேமேஜ் செய்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டியை ரசிகர்கள் மக்கள் நாயகி என கொண்டாடினர். கடைசி வரை பிக் பாஸ் […]

உலகம்

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. கடந்த அக்டோபா் 7-ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து அக்டோபர் 13, 15 மற்றும் […]