அமெரிக்காவில் உச்சக்கட்ட வெப்பம் – உருகி சட்டையுடன் ஒட்டிக்கொண்ட பையின் வார்ப்பட்டை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடும் வெயிலால் கை பையின் வார்ப்பட்டை உருகி சட்டையுடன் ஒட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த அளவிற்கு வெப்பம் இருப்பதாக ஒருவர் TikTok தளத்தில் பதிவேற்றம் செய்த காணொளியில் கூறினார். காணொளியில் அவர் தோள்பட்டையில் பை மாட்டியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. பையை அகற்றியவுடன் அவர் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையில் பையின் வார்ப்பட்டை வடிவத்தில் கறைகள் தெரிகின்றன. அது பிரபல Coach நிறுவனத்தின் பை என்றும் அவர் காணொளியில் கூறுகிறார். அந்தக் காணொளி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]