இந்தியா

இந்திய நாடாளுமன்றத்திற்கு அத்துமீறி நுழைந்த நபர்கள் : 8 பணியாளர்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த இரு நபர்களினால் , வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 […]

உலகம்

யாராலும் எங்களைத் தடுக்க முடியாது – போர் நிறுத்தம் தொடர்பிலான அழுத்தங்களுக்கு பிரதமர் நெதன்யாகு பதிலடி

  • December 14, 2023
  • 0 Comments

சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் குழுக்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக […]

உலகம்

மனித ரோபோவை அறிமுகம் செய்கிறார் எலான் மஸ்க்!

  • December 14, 2023
  • 0 Comments

டெஸ்லா நிறுவனம் தனது புதிய மனித ரோபோவைஅறிமுகம் செய்யும் காணொளி ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்டிமஸ் ஜென் 2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ இதற்கு முன் டெஸ்லா அறிமுகம் செய்த ரோபோக்களை விட அதிக திறன்களைக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு மனிதன் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபாவின், சமன் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. தயங்கி நடந்து வந்த ஆப்டிமஸ் இப்போது விறுவிறுவென […]

உலகம்

பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டம் : பலரை கைது செய்த டென்மார்க் போலீசார்

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் டென்மார்க் காவல்துறையினர் வியாழக்கிழமை பலரைக் கைது செய்தனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் குறிப்பிடவில்லை, ஐரோப்பிய ஒன்றிய உள்துறை ஆணையர் Ylva Johansson சமீபத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் ஐரோப்பா “பயங்கரவாத தாக்குதல்களின் பெரும் ஆபத்தை” எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ளார். ஒரு சில இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர்கள் குர்ஆனை பகிரங்கமாக இழிவுபடுத்திய பின்னர், […]

இலங்கை

இலங்கையில் வட் வரியால் பாடசாலை மாணவர்களுக்கும் பாதிப்பு!

  • December 14, 2023
  • 0 Comments

வட் வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், ஜனவரி முதல் பள்ளி உபகரணங்களின் விலை தற்போதைய விலையை விட இரு மடங்காக உயரும் என புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் ஆண்டிற்குத் தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை இவ்வருட இறுதிக்குள் கொள்வனவு செய்வது நல்லது என சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது கூட பள்ளி உபகரணங்களின் விலை கட்டுப்படியாக முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். கடந்த மாத விலையுடன் ஒப்பிடும் போது அனைத்து பாடசாலை உபகரணங்களின் […]

இலங்கை

மூன்று நாட்டு இலங்கைக்கான தூதுவர்கள் யாழ் மாவட்டத்திற்கு விஜயம்

சுவிட்சர்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தனர். சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் இன்று(14) பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். வெளிநாட்டு தூதுவர்கள் யாழ் மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பு, […]

பொழுதுபோக்கு

அசுர வேகத்தில் தளபதி 68… ரிலீஸ் தேதியை முடிவு செய்த விஜய்

  • December 14, 2023
  • 0 Comments

விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய தளபதி 68 ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்து, மீண்டும் சென்னை, துருக்கி, தற்போது ஹைதராபாத் என கேப் விடாமல் தளபதி 68 படப்பிடிப்பை நடத்தி […]

ஐரோப்பா

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்: ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் ஜெலென்ஸ்கி: ஐரோப்பாவில் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்களிடம் உரையாற்றிய வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இதனை தெரிவித்துளளார். நாங்கள் வாக்குறுதி அளித்த முடிவைப் பற்றி பேசுகிறோம். ஐரோப்பா முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தை நாம் ஏன் செயல்படுத்தக்கூடாது என்பதற்கான எந்த எதிர் வாதத்தையும் நான் கேட்கவில்லை. கடந்த ஆண்டு, உக்ரைன் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்த தெளிவான பரிந்துரைகளைப் பெற்றது. முக்கிய சட்டங்களை இயற்றியுள்ளோம். […]

ஆசியா

ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் நால்வர் இராஜினாமா!

  • December 14, 2023
  • 0 Comments

ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நிதி சேகரிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் ஜப்பானிய ஆளும் கட்சியின் பலமான முகாமைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 2022 வரை 5 ஆண்டுகளுக்கு சுமார் 500 மில்லியன் யென் மற்ற கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். இதன் காரணமாக பிரதமர் […]

உலகம்

தனது கல்லறைக்கான இடத்தை அறிவித்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டிய இடம் எது என்பதை அறிவிக்கும் விதமாக, “ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என நேற்று (13) மெக்சிகோ ஒளிபரப்பான டெலிவிசாவின் N+ ஸ்ட்ரீமிங் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். வத்திக்கான் அதிகாரபூர்வ ஊடக தகவலின்படி, இதுவரை பரிசுத்த பாப்பரசர் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் […]