இலங்கை

யாழில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் : 07 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில், இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடு முற்றிய நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த முதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் நால்வரும் மற்றைய தரப்பில் மூவருமாக 07 பேர் […]

இலங்கை

வடமாகாணத்தில் அதிபர்களுக்கான பாடசாலைகள் பிரதேச ரீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

  • December 21, 2023
  • 0 Comments

அண்மையில் தேசிய ரீதியாக வழங்கப்பட்ட அதிபர் தரம் மூன்றிற்கான நியமனத்தின் பின்னர் வடமாகணத்தில் சரியான முறையில் அதிபர்களுக்கான பாடசாலைகள் பிரதேச ரீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று (21.12) இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டது. தேசிய ரீதியில் 174 வெட்டுப் புள்ளிகளைப் பெற்று ஆதிபர் பரீட்சை போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தூரப்பிரதேசங்களுக்கு சேவைக்காக அனுப்பப்படும் அதேவேளை அதிக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் மைலேஜ்.. அசத்தலான பேட்டரியுடன் எலக்ட்ரிக் கார்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கி.மீ.க்கு மேல் வாகனத்தை இயக்கும் திறன் கொண்ட புதிய பேட்டரியை சீனாவில் உள்ள எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் நிரூபித்துள்ளது. ஷாங்காயை தளமாகக் கொண்ட நியோ, அடுத்த தலைமுறை பேட்டரி ஏப்ரல் 2024 இல் வெகுஜன உற்பத்தியில் நுழையும் என்று கூறுகிறது, இது தற்போது சந்தையில் உள்ள மற்ற மின்சார அல்லது எரிபொருளில் இயங்கும் காரை விட நீண்ட வரம்பை வழங்குகிறது. நியோ தலைமை நிர்வாகி வில்லியம் லி 14 மணி […]

இலங்கை

யாழில் வாட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை – இருவர் கைது!

  • December 21, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் போதே சந்தேகநபர்கள் வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுடன் தொடர்புகளை பேணி , போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது அந்நிலையில் சந்தேகநபர்களின் தொலைபேசிகளை […]

உலகம்

8,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையில் : மனித உரிமைகள் குழுக்கள்

ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பிறகு 8,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீன அரசியல் கைதிகளை ஆதரிக்கும் மனித உரிமைக் குழுவான அடமீர், கைதிகளில் 123 பெண்கள் உட்பட காஸாவிலிருந்து நூற்றுக்கணக்கானோர் அடங்குவர் என தெரிவித்துள்ளது. இருப்பினும் பிரதேசத்தில் இருந்து உண்மையான மொத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.எனவும் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்கா

கனடாவில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இந்தியக்கு நேர்ந்த கதி!

  • December 21, 2023
  • 0 Comments

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர் தங்கியுள்ளார்கள். அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர்.கடந்த செவ்வாயன்று அதிகாலை 7.35 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எரிவாயுக் கசிவு என்று நினைத்து அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைந்த நிலையில், அங்கு கார்பன் மோனாக்சைடு வாயுவால் அந்த வீட்டில் வசித்துவந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.ஆனால், அவர்களில் 25 வயதான இந்திய இளைஞர் ஒருவர் […]

இலங்கை

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்பு!

  • December 21, 2023
  • 0 Comments

வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் ஒருவர் இன்று (21.12) இடம்பெற்றுள்ளது. பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 18-20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதுடன் அவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உலுக்குளம் […]

உலகம்

அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான அறிவித்தல்!

  • December 21, 2023
  • 0 Comments

யு.எஸ். குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) எஃப் விசாவில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களை பாதிக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி முதன்முறையாக  இந்த F-1 விசா மாணவர்கள் இப்போது நேரடியாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான (EB) பிரிவின் கீழ் புலம்பெயர்ந்தோர் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம். USCIS ஆனது F மற்றும் M மாணவர்களின் புலம்பெயர்ந்தோர் அல்லாத வகைப்பாடுகள் குறித்த விரிவான கொள்கை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலானது, அமெரிக்காவில் உள்ள இந்த மாணவர்கள் மற்றும் அவர்களைச் […]

ஐரோப்பா

சூடு பிடிக்கும் ரஷ்ய அதிபர் தேர்தல் : புட்டினுக்கு எதிராக தேர்தலில் போட்டி இடும் டன்ட்சோவா :

முன்னாள் தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் யெகாடெரினா டன்ட்சோவா, மார்ச் மாதம் நடைபெறவுள்ள ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதான டன்ட்சோவா, கடந்த மாதம் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் உள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அழைப்பு விடுத்தார். புடினின் வெற்றி ஒரு முன்னறிவிப்பாகக் கருதப்படும் தேர்தலில் முறையாக நுழைவதற்கான ஆவணங்களை அவர் மத்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். புடினின் வெற்றியானது ஆதரவாளர்களாலும் […]

இலங்கை

பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள கால்நடை பண்ணையாளர்கள்!

  • December 21, 2023
  • 0 Comments

கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை 100 நாட்களை தொடும் நிலையில் அன்றைய தினம் பாரிய போராட்டத்திற்கு பண்ணையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் போராட்ட இடத்தில் இன்றைய (21.22)  தினம்ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதன்போதே பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமது மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம் நூறு நாட்கள் அண்மித்துள்ள நிலையில் தமது கோரிக்கைக்கான நியாயமான தீர்வுகள் எதுவும் இதுவரையில் வழங்கப்படாத நிலையே காணப்படுவதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல […]