இலங்கை

திருகோணமலை கன்னியா பகுதியில் வாகன விபத்து- மூவருக்கு காயம்!

  • September 1, 2023
  • 0 Comments

திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரச பஸ் கல் குவாரிக்கு அருகில் சுற்றுலா வந்த பஸ் ஒன்று திருப்ப முயற்சித்த போது விபத்துக்குள்ளானதாகவும் இதனால் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இவ்விபத்து இன்று (01) 11. 30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர். கன்னியாவிற்கு சுற்றுலா சென்ற தனியார் பஸ் […]

மத்திய கிழக்கு

மொராக்கோவில் ஜெட் ஸ்கீயிங் செய்தபோது எல்லை தாண்டிய இருவர் சுட்டுக் கொலை!

  • September 1, 2023
  • 0 Comments

மத்திய தரைக்கடல் நாடான மொராக்கோவின் சைடியாவில் உள்ள கடற்பகுதியில், ஜெட் ஸ்கீயிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள கடற்கரை ரிசாட்டில் இருந்து புறப்பட்டு ஜெட் ஸ்கீயிங் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வழிதவறி அண்டைநாடான அல்ஜீரிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அவர்களை நோக்கி அல்ஜீரிய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் பிலால் கிஸ்ஸி மற்றும் அப்தெலாலி மெர்சவுர் ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்மெயில் […]

பொழுதுபோக்கு

இளம் நடிகை தற்கொலை… பெற்றோர் அதிர்ச்சி

  • September 1, 2023
  • 0 Comments

கேரள மாநிலம் மலப்புரம் தென்ஹிபாலம் பகுதியை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர் (வயது31). இவர் மலையாளத்தில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மாடலிங் துறையில் இருந்துவந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு […]

ஐரோப்பா

பிரித்தானிய சிறுமி சாரா கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..!

  • September 1, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், மாயமானதாக கூறப்படும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரை 5 நாட்களுக்கு பின்னர் தான் பொலிஸார் தேடத் தொடங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி சாரா ஷெரீப் கொலை வழக்கில் தற்போது மாயமாகியுள்ள மூவருக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆயுளுக்கும் ஒளிந்திருக்க முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.சிறுமி சாரா கொலை வழக்கு தொடர்பில் தற்போது பாகிஸ்தானில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10ம் திகதி Woking பகுதியில் உள்ள குடியிருப்பு […]

இலங்கை

கொக்குதொடுவாய் விவகாரத்தில் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்

  • September 1, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய்மத்தி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்கு கொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது இன்று(31) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பாக இந்த வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி உள்ள […]

அறிந்திருக்க வேண்டியவை

நிலவின் தென்பகுதியில் மறைந்திருக்கும் மர்மம் – உறுதி செய்த ரோவர்

  • September 1, 2023
  • 0 Comments

நிலவின் தென் பகுதியில் தரை இறங்கி தன்னுடைய ஆய்வு பணியை மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பணியின் மூலம் ஆக்ஸிஜன், அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆற்றல்கள் நிலவின் நிலப்பரப்பில் புதைந்திருப்பதை கண்டறிந்து இருக்கிறது. சந்திராயன் 3ல் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை முதல் தனது பணிகளை தொடங்கி இருக்கிறது. பிரக்யான் ரோவர் […]

வாழ்வியல்

ஈறுகளில் இரத்தம் வருகிறதா? உங்களுக்கான பதிவு

  • September 1, 2023
  • 0 Comments

பற்களை வெண்மையாக வைத்துக்கொள்ளவும், துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கவும் மக்கள் பல வழிகளை மேற்கொள்கின்றனர். பற்பசை, பல்பொடி, மௌத் வாஷ் என பல வகையில் வாயையும், பற்களையும் சுத்தப்படுவதற்கு முயற்சி மேற்கொள்கின்றனர். இருப்பினும், சில விஷயங்களை முறையாக பின்பற்றாவிட்டால் பற்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, நீங்கள் உணவை முறையாக எடுத்துக்கொள்ளாவிட்டால், வயிறு பாதிக்கப்பட்டு வாயில் துர்நாற்றம் மட்டுமின்றி, பற்களில் கறையும் படியும் என பொதுவாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பற்களில் வழி ஏற்பட்டால் உங்களால் எளிதாக தாங்கிக்கொள்ளவே இயலாது. அந்த […]

இலங்கை

இலங்கைக்கு திரும்பிய 400 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்

  • September 1, 2023
  • 0 Comments

ஓமானில் பணிபுரிந்துவந்த 32 இலங்கையர்கள் நாட்டுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டிருக்கின்றார்கள். கடந்த வாரம் ஓமான் வெளிவிவகார அமைச்சு மற்றும் ஓமான் குடியகல்வுத் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு அழைத்துவரப்பட்ட இலங்கைப்பணியாளர்கள் வேலைவாய்ப்புக்காக நுழைவு வீசா அல்லது சுற்றுலா வீசாவின் மூலம் ஓமானுக்குச் சென்றவர்களாகும். எப்படியிருப்பினும் அவர்களது வீசா உரியகாலத்தில் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போதுவரை சுமார் 400 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் […]

ஆசியா

சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தால் சர்ச்சை – எதிர்க்கும் நாடுகள்

  • September 1, 2023
  • 0 Comments

சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தால் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் புதிய வரைபடத்தை நிராகரித்துள்ளன. சீனா தங்கள் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ள இந்த நாடுகள், எல்லைகளை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. கடந்த திங்கட்கிழமை சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகள், அக்சாய் சின் உள்ளிட்ட இந்தியப் பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. மேலும் பிலிப்பைன்ஸ் கடல் பகுதி, தென்சீனக் கடலில் குறிப்பிட்ட பகுதிகளும் […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் ஒன்லைனில் விற்கப்படும் உயிருள்ள புழுக்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

  • September 1, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பல்வேறு நோய்களுக்காக ஒன்லைனில் விற்கப்படும் உயிருள்ள புழு இனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு ஆஸ்திரேலிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உயிருள்ள புழுக்கள் குடல் தொற்று சிகிச்சைக்காக விற்பனை செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு உயிருள்ள புழு இனமும் நோய்களுக்கு ஏற்றது அல்ல என மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. உயிருள்ள புழுக்களால் மற்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான போக்கு இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உயிருள்ள புழுக்களை ஒன்லைனில் சுமார் 50 […]

You cannot copy content of this page

Skip to content