செய்தி

விதிமுறைகளில் மாற்றம்… ஐசிசி எடுத்த அதிரடி முடிவு

  • January 5, 2024
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), முடிவு மறுஆய்வு செய்யும் டிஆர்எஸ் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்து அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தேவைப்படும் புதிய விதிமுறைகள் அல்லது ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களை ஐசிசி செய்வது வழக்கமான ஒன்று. இதில், குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது முடிவு மறுஆய்வு (டி.ஆர்.எஸ்) முறை என்ற புதிய விதிகள் கொண்டு […]

இலங்கை

கொவிட் தடுப்பூசியால் சமூகத்தில் பல்வேறு நோய்கள் பரவியதா?

  • January 5, 2024
  • 0 Comments

கோவிட் தடுப்பூசி போட்டு சில காலங்கள் கழித்து பல்வேறு நோய்கள் தாக்கியதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம, பல்வேறு தரப்பினரும் இவ்வாறு கூறுவதில் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மை இல்லை. இதனிடையே, தட்டம்மை தடுப்பூசி போடும் தகுதி இல்லாத 9 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். மூடநம்பிக்கைகள் காரணமாக அம்மை தடுப்பூசியைப் 33 வீதமானோர் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் உச்சம் தொட்ட மரக்கறி மற்றும் மீனின் விலைகள்!

  • January 5, 2024
  • 0 Comments

இலங்கையில் பண்டிகைக்  காலங்களைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மரக்கறிகளின் விலை உச்சம் கண்டு வருவதாக பொருளாதார மத்திய நிலையங்களின் தரவுகள் தெரிவித்துள்ளன. இதன்படி  ஒரு கிலோ காரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மீன் மார்க்கெட்டில் மொத்த விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன்படி பேலியகொடை மீன் மார்க்கெட்டில் கெரவல் மீனின் கிலோவொன்றின் விலை 2000 ரூபாவாகவும், பாலையா 1000 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஐபோனில் உள்ள அம்சம் இனி ஆண்ட்ராய்டிலும்! பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • January 5, 2024
  • 0 Comments

என்னதான் இப்போது ஸ்மார்ட்போன்களில் அதிக திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டாலும், அது விரைவாக காலியாகி விடுகிறது என பலர் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். புதிய ஸ்மார்ட்போன்களில் சில மாதங்கள் வரை மட்டுமே அதன் பேட்டரி சிறப்பாக இருக்கும். ஆனால் போகப் போக பேட்டரியின் ஆற்றல் குறைந்து சார்ஜ் விரைவில் காலி ஆகிவிடும். அதே நேரம் ஆண்ட்ராய்டு போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் ஆண்ட்ராய்டு சாதனங்கள் பிரபலமாக உள்ளது. அதே நேரம் விலை அதிகமாக இருந்தாலும் […]

உலகம்

அமெரிக்காவில் உள்ள உயர்நிலை பள்ளியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயரிழப்பு, பலர் காயம்!

  • January 5, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதுடன், மேலும் ஐந்து பேரை காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது நேற்று (04.01) காலை 07.30 மணிக்கு இடம்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொாலிஸார் விரைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர வாகனங்கள் மற்றும் ஆயுதப் பிரிவுகள் பெர்ரி உயர்நிலைப் பள்ளிக்கு விரைந்ததுடன், வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் 11 அல்லது […]

ஆசியா

ஏவுகணை வாகன உற்பத்தியை அதிகரிக்க வடகொரிய அதிபர் அழைப்பு!

  • January 5, 2024
  • 0 Comments

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், பல்வேறு ஏவுகணை ஏவுகணை வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளார். எதிரியுடன் “இராணுவ மோதலுக்கு” தயார் செய்வது ஒரு முக்கியமான பணி என்று அவர் அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிரான்ஸ்போர்ட்டர் எரெக்டர் லாஞ்சர் (TEL) உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிட்ட கிம், தந்திரோபாய மற்றும் மூலோபாய ஆயுதங்களுக்காக பல்வேறு வாகனங்களை தயாரிப்பது நாட்டின் அணு ஆயுதப் போரைத் தடுப்பதில் முக்கியப் பணியாகும் என்று குறிப்பிட்டதாக […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் – அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

  • January 5, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலரை ஆயுததாரி ஒருவர் பிணயக்கைதிகளாக பிடித்து வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதன்கிழமை நண்பகல் கட்டிடம் ஒன்றில் இருந்து  கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றனர். அதே கட்டிடத்தில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், அங்கு வசிக்கும் பலரை வீடொன்றுக்குள் வைத்து பூட்டி வைத்து அவர்களை ஆயுத முனையில் மிரட்டியுள்ளார். பின்னர் அவருடன் பொலிஸ் பேச்சுவார்த்தை நிகழ்த்தி அனைவரையும் விடுவித்துள்ளனர். ஆயுததாரியும் கைது செய்யப்பட்டார். அசம்பாவிதங்கள் […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழையுடன் கூடிய வானிலை!

  • January 5, 2024
  • 0 Comments

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (05.01) பல காலப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும்,  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பணியிடங்களில் ஊழியர்கள் செய்யும் செயல் – வெளியான காரணம்

  • January 5, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் தொழிலாளர்கள் வேலை தளங்களில் விடுமுறை அதிகமாக எடுப்பதாக புள்ளி விபரம் ஒன்றுவெளியாகியுள்ளது. அதாவது தொழில் புரிகின்றவர்கள் தங்களது உடல் சுகயீனம் காரணமாக தொழிலுக்கு சமூகமளிக்காமல் இருக்கும் விடயமானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டு இவ்வாறு 132 மில்லியன் நாட்கள் வேலை செய்கின்றவர்கள் வேலைக்கு சமூகமளிக்கவில்லை என்று புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையானது 126 மில்லியன் நாட்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த நாட்கள் கூடுவதற்கு முக்கிய […]

ஆசியா

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்!

  • January 5, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்க்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் பெரும் வீழ்ச்சி கண்டது. இது நோய்த்தொற்று அதிகமாக இருப்பினும் தற்போதைய நோய் அலை குறைந்து வருவதைக் காட்டுவதாக கூறப்படுகிறது. “கொவிட்-19 நோய்த்தொற்று அலை குறைந்து வருகிறது என்று நம்பிக்கை கொள்ளலாம்,” என்று தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர் கருத்துரைத்தார். டிசம்பர் 24லிருந்து 30ஆம் தேதிவரை […]