உலகம்

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் மீட்பு!

  • January 6, 2024
  • 0 Comments

சோமாலியா அருகே அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட லைபீரியாவைச் சேர்ந்த MV Leila Norfolk வணிகக் கப்பலின் பணியாளர்களை மீட்பதில் இந்திய கடற்படை வெற்றி பெற்றுள்ளது. லைபீரிய கொடியுடன் கூடிய கப்பல் ஆயுதம் ஏந்திய குழுவினால் கடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இந்திய கடற்படை வீரர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதில் 21 பணியாளர்கள் உள்ளனர் அவர்களில் 15 பேர் இந்தியர்கள். குறித்த கப்பலும் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

20 வயது பாடகியுடன் இணையும் 44 வயது பிரேம்ஜி? கிடைத்தது பதிலடி..

  • January 6, 2024
  • 0 Comments

இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகனாகிய பிரேம்ஜி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி68 படத்தில் நடித்து வருகின்றார். 44 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹாட்டின் விட்டும் வருகிறார். இந்நிலையில் புத்தாண்டு அன்று இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்வேன், Dot என்று கூறியிருந்தார். தற்போது அவர் […]

இலங்கை

இலங்கையில் முதல் முறையாக இடம்பெறும் ஜல்லிக்கட்டு போட்டி!

  • January 6, 2024
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லி கட்டு போட்டிகள் இன்று (06.01) ஆரம்பமாகியுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில்  அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீறி பாயும் காளைகளை அடக்க களம் காணும் வீரர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உலகம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 15 சந்தேக நபர்களுக்கு சிறை தண்டனை : துருக்கிய நீதி அமைச்சர்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 34 பேரில் 15 பேரை விசாரணைக்காக சிறையில் அடைக்க இஸ்தான்புல்லில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று துருக்கியின் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் துருக்கியில் வசிக்கும் வெளிநாட்டினரை “உளவு பார்த்தல்” மற்றும் “பின்தொடர்வது, தாக்குவது மற்றும் கடத்துவது” உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். நீதி அமைச்சர் யில்மாஸ் துங்க் ஒரு சமூக ஊடக பதிவில், இஸ்ரேலிய உளவுத்துறை சார்பாக “அரசியல் […]

இலங்கை

இலங்கையில்ன வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதா?

  • January 6, 2024
  • 0 Comments

1000 சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது என்ற செய்தி பொய்யானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சங்கத்தின் தலைவர்  இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்தார்.  

இலங்கை

மட்டக்களப்பு நகரில் திறக்கப்பட்ட தபாலக கட்டிட தொகுதி

மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டது. அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய […]

இலங்கை

ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், ஜல்லி கட்டை நடத்துவதும் தமிழர்களின் கலாச்சார அழிவிற்கு வித்திடும் – சக்திவேல்!

  • January 6, 2024
  • 0 Comments

ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடாத்துவதும் அரசியல் ரீதியான தமிழர்களின் கலாச்சார அழிவுக்கு வித்திடும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (06.01) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  “வடகிழக்கு தமிழர்களுக்கு எதிரான பாரிய இன அழிப்பு போரை முன்னெடுத்து இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை […]

உலகம்

செங்கடல் தாக்குதல்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தை பாதிக்கலாம் : விடுக்கபப்ட்டுள்ள எச்சரிக்கை

செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்று அதிபர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். செங்கடலில் என்ன நடக்கிறது என்பதை நாம் வெளிப்படையாக கண்காணிக்க வேண்டும்,.இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், நாங்கள் அதை மிகவும் கவனமாகப் பார்ப்போம்.என்று இங்கிலாந்து அதிபர் தெரிவித்துள்ளார். “ஹவுதிகளுக்கு மிகவும் தெளிவாக… பின்விளைவுகள் இருக்கும், நாங்கள் அமைதியாக உட்கார்ந்து தாக்குதல்களை ஏற்க மாட்டோம், ஏனெனில் செங்கடல் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானது” என்று ஹன்ட் மேலும் கூறியுள்ளார்.

பொழுதுபோக்கு

நேர்காணலில் இமான் பத்தி வாய் திறக்கமல் இருக்க இதுதான் காரணமா?

  • January 6, 2024
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பேட்டியளித்து வருகிறார். அவர் கொடுக்கும் பேட்டியில் அயலான் படத்தை மட்டுமே பேசி வருவதாகவும் இமான் பிரச்சனை குறித்த கேள்விகள் கேட்கப்படாமல் இருப்பது குறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். இமான் பேசியது எல்லாம் பொய்யோ என்று சிவகார்த்திகேயன் பேட்டியை பார்க்கும் மக்களுக்கு தோன்றும். உண்மை […]

உலகம்

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் தாக்குதல்

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலில் சுமார் 40 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு மெரோன் பகுதிக்குள் ராக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. வடக்கு இஸ்ரேலின் மற்ற பகுதிகளில் ராக்கெட்டுகள் அல்லது ட்ரோன்கள் ஏவப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏவுதலில் பங்கேற்ற லெபனான் பிரதேசத்தில் “பயங்கரவாதப் படையை” தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.