ஐரோப்பா

விரைவில் வட கொரியாவிற்கு விஜயம் செய்யும் விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் பியோங்யாங்கிற்குச் செல்வதற்கான தனது விருப்பத்தைக் தெரிவித்துள்ளதாக வட கொரியாவின் அரச ஊடகமானமொன்று தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய்யை சந்தித்தபோது, ​​வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வருகைக்கு அழைப்பு விடுத்ததற்கும் புடின் நன்றி தெரிவித்தார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வடகொரியாவுக்கு ரஷ்யத் தலைவரின் முதல் பயணம் இதுவாகும். கிம்ளின் செய்தித் […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் – 2 ரெடி…. வெறித்தனமான அப்டேட் இதோ…

  • January 21, 2024
  • 0 Comments

ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ஹிட் ஆனது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கின்றனர். இதுவரை இவ்வளவு பெரிய லாபம் படங்களில் இருந்து சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் […]

இலங்கை

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை : விவசாய அமைச்சர்

தேவையான அளவு அரிசியை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில், நாட்டிற்குள் அதிகளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். “2022 ஆம் ஆண்டில், நாட்டின் அரிசி தேவையில் மூன்றில் ஒரு […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : பிரித்தானிய நீதிமன்றத்தை நாட இலங்கை அரசு நடவடிக்கை!

  • January 21, 2024
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து மற்றும் மூழ்கியதால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி பிரித்தானிய அட்மிரல்டி உயர்நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கப்பலின் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் பவுண்ட்ஸ் ஸ்ரேலிங்காக நீதிமன்றம் முன்னர் மட்டுப்படுத்தியிருந்ததாக திணைக்களம் குறிப்பிடுகிறது. அதன் மூலம் கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு போதிய இழப்பீடு தொகையை வசூலிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதேவேளை, […]

ஐரோப்பா

இஷா புயல்: பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

128km வேகத்தில் காற்று வீசுவதுடன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் புதிய புயல் பின்னர் இங்கிலாந்தைத் தாக்க உள்ளது என அறிவிக்கபப்ட்டுள்ளது. இஷா புயல் இங்கிலாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பெரும்பகுதிகளில் காற்றுக்கான அம்பர் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து. பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் இங்கிலாந்தைத் தாக்கும் புயல்களில் ஒன்பதாவது பெயர் ஈஷா ஆகும். புயலின் வலுவான காற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள் காலை வரை எதிர்பார்க்கப்படுகிறது, […]

இலங்கை

வவுனியாவில் யுவதி மீது தாக்குதல் : இரு பெண்கள் கைது!

  • January 21, 2024
  • 0 Comments

வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு பெண்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (20.01) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப்பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையிலேயே குறித்த யுவதி மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வடிகாலமைப்பு சீரற்ற […]

இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் : வெளியான தகவல்!

  • January 21, 2024
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு உத்திகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் கூறுகின்றன. புதிய பாதுகாப்பு யுக்திகளுக்கு, முன்னாள் பாதுகாப்பு படையினர் பல உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய முறைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை அண்மைய பாதுகாப்பு யுக்திகளை அக்கட்சி கையாண்ட போதிலும் அதையும் தாண்டிய புதிய வழிமுறைகள் தேவை […]

இலங்கை

இலங்கையில் பெரும்பாலான தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்!

  • January 21, 2024
  • 0 Comments

இந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். சமூக பொலிஸ் ஸ்தாபனத்தின் ஐந்தாம் கட்டமாக கொழும்பு மத்திய பிரிவின் சமூக பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் வைபவம் நேற்று (20) மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கில் இடம்பெற்றது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் […]

இலங்கை

இலங்கை – பாணந்துறை கடற்பகுதியில் நீராடச்சென்ற போலந்து பிரஜை உயிரிழப்பு!

  • January 21, 2024
  • 0 Comments

பாணந்துறை கடற் பகுதியில்  நீராடச் சென்ற போலந்து நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார். இதன்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர், உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு […]

பொழுதுபோக்கு

பூர்ணிமாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. குவியும் பட வாய்ப்புகள்

  • January 21, 2024
  • 0 Comments

நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னர் என தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை மணி பிடிக்க மூன்றாவது இடத்தை மாயா மற்றும் நான்கு, ஐந்து இடங்களில் விஷ்ணு, தினேஷ் பிடித்தனர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறினார். ரூ. 1 லட்சத்தில் இருந்து துவங்கிய இந்த சுற்று இறுதியாக ரூ. 16 லட்சம் வந்தது. இதன்பின் தொகை அதிகரிக்கவும் செய்யும், குறையவும் செய்யும் […]