இலங்கை

மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டு முற்றத்தில் நின்ற சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்!

  • January 24, 2024
  • 0 Comments

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (23) பதிவாகியுள்ளது.இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது,”அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார். திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு குரங்குகள் அவரின் மீது […]

இலங்கை

வெகு சிறப்பாக நடைபெற்ற நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று (24) வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டு யானை, குதிரை என்பன வலம் வந்தன. கும்பாபிசேஷகம் நடைபெற்றபோது பெரியளவிலான ட்ரோன் மூலம் ஆலயத்துக்கு பூக்கள் தூவப்பட்டது கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து […]

ஆசியா

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு : போக்குவரத்து முடக்கம்!

  • January 24, 2024
  • 0 Comments

மத்திய ஜப்பானில் உள்ள ஒரு முக்கிய விரைவுச் சாலையில் கடும் பனி காரணமாக போக்குவரத்து முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. Gifu மாகாணத்தில் உள்ள Meishin விரைவுச்சாலையில் இரண்டு டிரக்குகள் பனியில் சிக்கியதை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் டஜன் கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக மத்திய நிப்பான் எக்ஸ்பிரஸ்வே தெரிவித்துள்ளது. வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

இலங்கை : ஆன்லைன் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்! சமூக வலைத்தளங்கள் முடங்கும் அபாயம்!

  • January 24, 2024
  • 0 Comments

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (24.01) நடைபெற்றது. அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர். ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதன்படி, இணையத்தள பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதேவேளை குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆசியா

பாலஸ்தீனர்களுக்கு பதிலாக இந்தியர்களை பணியமர்த்தும் இஸ்ரேல்

இஸ்ரேலில் பணிபுரிந்த பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசே பாலஸ்தீனர்களை பணியமர்த்த தடை விதித்தது. அவர்களின் பணியாளர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இஸ்ரேல் நிறுவனங்கள் பலவற்றில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தெல் அவிவில் உள்ள பல கட்டுமான நிறுவனங்கள், இஸ்ரேல் அரசிடம் 1 லட்சம் இந்தியர்களைப் பணியமர்த்த அனுமதி கோரியிருந்தன. அதனடிப்படையில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகள் செய்த விளம்பரத்தினால், 20,000 பணியிடங்கள் இந்தியர்களால் நிரப்பப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]

உலகம்

ஒரு கொலையை மறைக்க 76 பேரின் உயிரைப் பறித்த வாலிபர்!- கைது செய்த பொலிஸார்

  • January 24, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் ஒரு கொலையை மறைப்பதற்காக தீ விபத்தை ஏற்படுத்தி 76 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 குழந்தைகள் உட்பட 76 பேர் உயிரிழந்ததோடு, 120 பேர் படுகாயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் தொடர்பாக, […]

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் மண்டேலா பயன்படுத்திய பொருட்களை ஏலமிட நடவடிக்கை!

  • January 24, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் நிறவெறிக்கு எதிரான வீரருமான நெல்சன் மண்டேலாவுக்கு சொந்தமான டஜன் கணக்கான கலைப்பொருட்கள் நிவ்யோர்க்கில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி குர்ன்சியின் ஏல இல்லத்தில் குறித்த பொருட்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இதன் மொத்த மதிப்பு 02 தொடக்கம் 03 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. “கிட்டத்தட்ட நூறு பொக்கிஷமான பொருட்கள் – ஏதோ ஒரு வகையில் மண்டேலாவின் வாழ்வில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை […]

ஆசியா

மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய ராணுவம் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல்

  • January 24, 2024
  • 0 Comments

மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய ராணுவத்தை நோக்கி வடகொரியா இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தென் கொரிய ராணுவத்தின் கூட்டுப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். கப்பல்கள் மூலம் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலின் விவரங்கள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், வடகொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.  

இலங்கை

திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்;பெண்ணொருவர் உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

  • January 24, 2024
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் (24) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர் மாட்டின் உரிமையாளரிடம் நட்டியீடு கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு […]

ஆசியா

(UPDATE) சீனா- தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

  • January 24, 2024
  • 0 Comments

சீனாவின் தென்கிழக்கு ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 39  பேர் உயிரிழந்ததாக தற்போதைய தகவல்கள் தெரிவித்துள்ளன. https://iftamil.com/fire-in-chinas-jiangxi-province-25-people-killed