ஆசியா

சிங்கப்பூரில் பொலிஸார் தாக்குதல் நடத்திய இந்திய வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு

  • January 25, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வசித்து வருபவர் ஹரிதாஸ் ரையான் பீட்டர் ( 49). இந்தியா வம்சாவளியான இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 52 வயது காதலியுடன் ஒன்றாக வசித்து வருகின்றார். இந்த நிலையில், குடியிருப்புக்கு அருகே வசித்தவரை தாக்கிய வழக்கில், தகவல் கிடைத்து பொலிஸார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது, அந்நபர் பொலிஸாரை கைது செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஒரு கட்டத்தில் அவர், கைது செய்ய வந்தவர்களில் ஒருவரான 22 வயதுடைய சிறப்பு கான்ஸ்டபிளின் […]

இந்தியா

அதீத மூடநம்பிக்கையால் 5 வயது குழந்தையை கங்கையில் மூழ்கடித்து கொலை செய்த பெற்றோர்!!

  • January 25, 2024
  • 0 Comments

இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு 5 வயது ஆண் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் வந்தனர்.அவர்கள், தங்களது குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் குணமாகும் என்ற நம்பிக்கையில் குழந்தையை தண்ணீரில் மூழ்க வைத்தனர். அப்போது அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர், இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் கழன்று விழுந்த விமானத்தின் டயர்..!

  • January 25, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ‘டெல்டா’ விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 757 ரக விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 184 பயணிகளும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு கட்டுப்பாட்டு அறை சிக்னலுக்காக விமானிகள் காத்திருந்தனர். அப்போது விமானத்தின் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விழுந்ததனால் அந்த விமானம் அதிர்ந்தது. இந்நிலையிஒ விமானத்தின் முன்பக்க டயர் கழன்றதை […]

இலங்கை

இலங்கை இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் : அமெரிக்கா கவலை

சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். “ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், தெளிவற்ற மற்றும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்ட சட்டங்கள் முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தடுக்கலாம், இலங்கைக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்கவும், எந்தவொரு […]

இலங்கை

பழம் பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி..!

  • January 25, 2024
  • 0 Comments

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தை சேரந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் . மரத்தில் இருந்து கீழே விழுந்தவரை அயலவர்கள் கஹவத்தை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

ஆசியா

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நிஜ சிங்கம், புலி… பாகிஸ்தான் கட்சிகள் மத்தியில் தடுமாற்றம்

  • January 25, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் சின்னத்துக்கான தடுமாற்றமும், போராட்டமும் எழுந்துள்ளது. பொதுத்தேர்தல் நெருங்குவதை அடுத்து பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மும்முரம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப் – இம்ரான் கான் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட்டு சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ள போதும், அவரது கட்சியினர் தேர்தல் களத்தில் தீயாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே தேர்தலுக்காக நாடு திரும்பியிருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தேர்தல் பிரச்சாரக் […]

இலங்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, புட்டின் வழங்கிய பரிசு!

  • January 25, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கு ரத்தினக் கற்கள் பதித்த தங்க வாளை பரிசாக வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்த வேளை ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த வாள் பரிசாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போராடிய இந்நாட்டு ராணுவ வீரருக்கு சொந்தமான அந்த வாள் இங்கிலாந்தில் ஏலத்தில் கண்டெடுக்கப்பட்டது எனவும், அது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

இலங்கை

அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!

  • January 25, 2024
  • 0 Comments

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதுவே இதுவரையில் தீர்க்கப்படாத அதிபர் சேவையின் பிரச்சினைகளைத் தீர்த்து, கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ற வகையில் அந்த சேவையின் தொழில் பண்பை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையாகும். இந்த அறிக்கையில், பிரச்சனைகள் பற்றிய ஆய்வு மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் 06 முக்கிய புள்ளிகளுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதான சேவையை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக அபிவிருத்தி செய்தல், பிரதான சேவைக்கான தேசிய கொள்கைகளை வகுத்தல், சேவை அரசியலமைப்பை திருத்துதல் […]

இந்தியா

கர்நாடகாவில் அடுத்த அதிர்ச்சி… கால்வாயில் நிர்வாணமாக மிதந்த பெண்ணின் உடல்!

  • January 25, 2024
  • 0 Comments

மாண்டியா மாவட்டத்தில் பள்ளி ஆசிரியை தீபிகா படுகொலை செய்யப்பட்டு அந்த சுவடு மறையும் முன் அதே பகுதியில் கால்வாயில் நிர்வாணமாக பெண் உடல் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம் மாணிக்யன ஹள்ளியைச் சேர்ந்தவர் தீபிகா(28). ரீல்ஸ் மூலம் கர்நாடகா முழுவதும் பரவலாக அறிமுகமானவர். இவரது கணவர் லோகேஷ். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக […]

ஆசியா

காசாவில் மோசமான மனிதாபிமான நிலைமை : ஆயிரக்கணக்கானோர் இறக்கும் அபாயம்

கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் உணவு, மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணிகள் தீர்ந்துவிட்டதாக காசாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் முற்றுகையின் காரணமாக மருத்துவமனையில் சுகாதார மற்றும் மனிதாபிமான நிலைமை மிகவும் பேரழிவை ஏற்படுத்துகிறது” என்று அமைச்சகம் தெரிவித்துளளது. சுகாதார அமைப்பு சரிந்து வருவதால் காசாவின் 36 மருத்துவமனைகளில் 16 மருத்துவமனைகள் ஓரளவு கூட செயல்படவில்லை என்று ஐநா பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அதாவது காஸா மக்கள் […]