இலங்கை

இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • July 7, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவருகிறது. விமான நிலைய பொலிஸ் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. இந்த மாதம் அமலாகும் நடைமுறை

  • July 7, 2025
  • 0 Comments

வீடியோக்களை பதிவேற்றும் தளங்களில் முக்கிய தளமாகவும் வருமானம் தரக்கூடியதாகவும் யூடியூப் இருந்து வருகிறது. தற்போது யூடியூப்பில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள், உண்மையான படைப்பாளர்களைப் பாதுகாக்கவும் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, மீண்டும் மீண்டும் பதிவேற்றப்படும் வீடியோக்கள், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோக்கள், குறைந்த தரம் கொண்ட வீடியோக்களுக்கு இனி வருமானம் வழங்குவதை யூடியூப் கடினமாக்கியுள்ளது. இனி அசல் உள்ளடக்கத்தை புதிதாக உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மட்டுமே […]

விளையாட்டு

58 ஆண்டுகளின் பின்னர் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

  • July 7, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டு போட்டி முடிவில் 1-1 என தொடரை சமன் செய்தது. இதன் மூலம் 58 ஆண்டுகால தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் முடிந்திருந்த எட்ஜ்பாஸ்டனின் பழைய பதிவை மாற்றியமைத்தது. இந்த போட்டியில், இந்தியாவுக்காக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதல் […]

உலகம்

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் வேலைகள் குறித்து ஸ்வீடன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • July 7, 2025
  • 0 Comments

பல துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஸ்வீடன் ஆய்வில் தெரியவந்துள்ளது. சுகாதாரம், கற்பித்தல், சமூக சேவைகள், நுகர்வோர் சேவைகள் அல்லது போக்குவரத்து போன்ற வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம் என்று தெரியவந்துள்ளது. 2006 முதல் 2020ஆம் ஆண்டு வரை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கண்காணித்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மோதல் சூழலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 24% அதிகமாக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

இலங்கை

இலங்கையில் சில இடங்களில் இன்றும் மழையுடனான வானிலை

  • July 7, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

உடன்பாட்டை ஏற்காவிட்டால் 70 சதவீதம் வரை வரிவிதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

  • July 7, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் வர்த்தக உடன்பாட்டை ஏற்காவிட்டால் ஒகஸ்ட் முதல் திகதியில் இருந்து, 70 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று 12 நாடுகளுக்கு டிரம்ப் கடிதங்களை கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். இதில் இந்தியாவும் இடம் பெற்றதா என்பது குறித்து தகவல் இல்லை. இதுவரை பிரிட்டன் மற்றும் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

Work visa பெற்றுக் கொள்ள கூடிய எளிதான நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

  • July 7, 2025
  • 0 Comments

வெளிநாட்டவர்களுக்கு பணி விசாக்களைப் பெறுவதை பல நாடுகள் கணிசமாக எளிதாக்கியுள்ளன. குறைந்த விலை திறமையான தொழிலாளர் விசாக்களை வழங்குவதில் லாட்வியா முன்னணி நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அயர்லாந்தும் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அயர்லாந்து நீண்ட கால விசா விருப்பங்களை வழங்கும் நாடாக அறியப்படுகிறது. சர்வதேச தொழிலாளர்கள் குறைந்த வருமானத்துடன் நிபந்தனை அனுமதிகளைப் பெறக்கூடிய நாடாக ஐஸ்லாந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெர்மனியும் ஐக்கிய இராச்சியமும் தேவைப்படும் தொழில்களுக்கு மட்டுமே விசாக்களை வழங்குகின்றன, மேலும் […]

உலகம் செய்தி

உலக வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது – சீனா அறிவிப்பு

  • July 7, 2025
  • 0 Comments

உலக வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது – சீனா அறிவிப்ப உலக வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என சீனா மீண்டும் அறிவித்துள்ளது. சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் நடைபெறும் 13ஆவது உலக அமைதி மாநாட்டில் சீனத் துணை ஜனாதிபதி ஹான் ஸெங் இதனை குறிப்பிட்டுள்ளார். வர்த்தக வரிப் போர்களில் வென்றவர் இல்லை என சீனத் துணை ஜனாதிபதி ஹான் ஸெங் குறிப்பிட்டுள்ளார். உலக வர்த்தகம் சுமுகமாக நடைபெற வேண்டுமானால் பல நாட்டு வர்த்தக முறையைக் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் விமானத்தில் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்த பயணிகள்

  • July 7, 2025
  • 0 Comments

அமெரிக்க விமானமொன்றில் பயணிகள் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் தவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குளிர்சாதனம் வேலை செய்யவில்லை என்றும் வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது எனவும் பயணித்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். Tiktok தளத்தில் பகிரப்பட்ட காணொளியில் பயணிகள் பலர் விசிறிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. கடந்த மாதம் 24ஆம் திகதி, brigchicago எனும் கணக்கில் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது. வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் அமைதி காக்கும்படி விமான ஊழியர்கள் கூறியதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார். காணொளியைக் கண்ட இணையவாசிகள் சிலர் ஊழியர் மீது […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

டெக்சாஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போப் லியோ இரங்கல்

  • July 6, 2025
  • 0 Comments

டெக்சாஸில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களுக்கு போப் லியோ இரங்கல் தெரிவித்துள்ளார். “டெக்சாஸில் உள்ள குவாடலூப் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவில் கோடைக்கால முகாமில் இருந்த அன்புக்குரியவர்களை, குறிப்பாக அவர்களின் மகள்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் நான் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்குப் பிறகு அமெரிக்காவில் பிறந்த போப் லியோ குறிப்பிட்டுள்ளார். ஜூலை 4 அன்று பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் […]