ஆஸ்திரேலியா

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க தயாராகும் அவுஸ்திரேலியா

  • August 11, 2025
  • 0 Comments

செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில், பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது பலஸ்தீன மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கும், சர்வதேச அரசியல் அமைப்பிலும் முக்கியமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. எனினும், அவுஸ்திரேலிய அரசின் இந்த முடிவு முக்கிய நிபந்தனையுடன் வந்துள்ளது. அதன்படி, ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் எதிர்கால பலஸ்தீன அரசாங்கத்துடன் எந்தவிதமான தொடர்பும் வைத்திருக்கக்கூடாது என்பதே அவுஸ்திரேலியாவின் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வாகனக் கொள்வனவில் உலகின் 3வது அதிக விலை கொண்ட நாடாக இலங்கை

  • August 11, 2025
  • 0 Comments

வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் இந்த குறியீட்டில் இலங்கையின் மதிப்பெண் 175 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாகன விலைகள் உலகளாவிய சராசரி அளவுகோலான 100 ஐ விட இலங்கையில் விலை 1.75 மடங்கு அதிகமாகும். இதில் சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

எல்லை அருகே டிரம்ப் பாதை அமைப்பதைத் தடுக்க தயாராகும் ஈரான்

  • August 11, 2025
  • 0 Comments

ஈரான் எல்லை அருகே டிரம்ப் பாதை அமைக்கவிருப்பதை தடுக்கப்போவதாக ஈரான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அஸர்பைஜானுக்கும் அர்மீனியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு உருவாக உதவினார். உடன்பாட்டின் ஒரு பகுதியாக அஸர்பைஜானுக்கும் அதன் தன்னாட்சி வட்டாரமான Nakhchivan பகுதிக்கும் இடையே பாதை அமைக்க இணக்கம் காணப்பட்டது. அந்த 32 கிலோமீட்டர் தூரப் பாதை ஈரானிய எல்லையில் அமைகிறது. இரு நாடுகளும் அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நொபெல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்போவதாகக் கூறுகின்றன. ஆனால் ஈரான் […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காஸாவில் சண்டை நிறுத்தம் கோரி இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

  • August 11, 2025
  • 0 Comments

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் சுமார் 1,00,000 பேர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல், காஸா நகரம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது பிணைக் கைதிகளாக அங்கு சிறைக்கேட்பட்டுள்ள இஸ்ரேலியர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் என ராணுவம் எச்சரித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹமாஸிடம் இருக்கலாம் என கருதப்படும் […]

வாழ்வியல்

பார்வை கோளாறுகளை சீராக்கும் குங்குமப்பூ!

  • August 11, 2025
  • 0 Comments

குங்குமப்பூவை அறியாதார் யாரும் இருக்கமுடியாது எனினும் அதனுடைய மருத்துவக் குணத்தை பலரும் அறிந்திருப்பதில்லை. பொதுவாக கர்ப்பமடைந்த பெண்கள், குங்குமப்பூவை எடுத்துக் கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், குங்குமப் பூ கர்ப்பச் சிதைவை தடுக்கும் தன்மை கொண்டது. எனவேதான், நமது முன்னோர்கள் குங்குமப்பூவின் உயர்ந்த மருத்துவக் குணத்தையறிந்தே குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கச் சொல்லி வைத்தார்கள். சிலர் இனிப்பு பண்டங்களில் கலந்து சாப்பிடச் சொன்னார்கள். இன்றைய காலகட்டத்திலும் குங்குமப்பூவின் […]

ஆஸ்திரேலியா

சிட்னியில் அதிகரிக்கும் மக்கள் தொகை – வீட்டு வசதி நெருக்கடி தீவிரம்

  • August 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியின் வீட்டுவசதி நெருக்கடி கடுமையானதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் முன்மொழியப்பட்ட ஒரு புதிய திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் சிட்னியில் இந்தப் பிரச்சினையைக் குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுவசதி நெருக்கடி 67% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக சிட்னி அறியப்படுகிறது. வாழ்க்கைச் செலவு / வீட்டு வாடகை அதிகரிப்பு காரணமாக வீடு அல்லது வேலை தேடுவதில் சிக்கல் இன்னும் தீவிரமாகிவிட்டதாக […]

உலகம்

அவசரகால நிலையை அறிவித்த ஹைட்டிய அரசாங்கம்

  • August 11, 2025
  • 0 Comments

ஹைட்டிய அரசாங்கம் குற்றவியல் கும்பல்களின் வன்முறை அதிகரித்து வருவதால் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. மூன்று மாத காலத்திற்கு அவசரகால நிலை அமலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆயுதமேந்திய கும்பல்களின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலவும் பாதுகாப்பின்மையை எதிர்த்துப் போராட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசாங்கம் மேலும் கூறுகிறது. தற்போது நெருக்கடியை எதிர்கொள்ளும் விவசாயம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளைக் காண இது பயன்படுத்தப்படும் என்றும் ஹைட்டிய அரசாங்கம் நம்பிக்கை […]

செய்தி

சில மாதங்கள் சைவ உணவுக்கு மாறுவதால் உடலில் ஏற்படும் மாற்றம் – புதிய ஆராய்ச்சியில் தகவல்

  • August 11, 2025
  • 0 Comments

இறைச்சியை தவிர்ப்பது எடை இழப்புக்கு நன்மை தரும் என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மாதங்கள் சைவ உணவு உண்டவர்கள், வாரத்திற்கு சுமார் 375 கிராம் என, மொத்தமாக 6 கிலோ எடை இழந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இறைச்சி, பால், முட்டைகள் போன்ற விலங்கு உணவுகள், செரிமானத்தின் போது அதிக ‘உணவு அமிலம்’ (dietary acid) உற்பத்தி செய்கின்றன. இது உடலுக்கு வீக்கம் ஏற்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை பாதித்து எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என […]

விளையாட்டு

ஏலத்தில் விடப்பட்ட கில் அணிந்த ஜெர்ஸி

  • August 11, 2025
  • 0 Comments

சமீபத்தில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின்போது இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயன்படுத்திய ஜெர்ஸி, தொப்பி உள்ளிட்ட பொருட்கள், அறக்கட்டளை நிறுவனம் ஒன்றுக்காக ஏலம் விடப்பட்டன. அதில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பயன்படுத்திய ஜெர்ஸி ஆடை, அதிகபட்சமாக ரூ.5.41 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்திய வீரர்கள் பும்ரா, ஜடேஜா பயன்படுத்திய ஜெர்ஸிக்கள் தலா, ரூ. 4.94 லட்சத்துக்கு விற்பனை ஆகின. இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பயன்படுத்திய தொப்பி, […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • August 11, 2025
  • 0 Comments

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான […]

Skip to content