அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளின் சோதனையின்போது வேளாண் ஊழியர் ஒருவர் மரணம்
அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின்போது காயமடைந்த ஒரு வேளாண் ஊழியர் உயிரிழந்ததாக அவரது குடுபத்தினர் (ஜூலை 12) கூறியுள்ளனர். கலிஃபோர்னியாவில் உள்ள சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட கஞ்சாத் தோட்டத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கள்ளக் குடியேற்றத்துக்கு எதிரான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிர்ம்பின் முடிவுக்கு ஏற்ப இம்மாதம் 10ஆம் திகதி வேளாண் நிலங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஆவணமில்லாத 200 குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது. உயிரிழந்த வேளாண் ஊழியரின் குடும்பம் […]