சில நிமிடங்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்தினாலும் மூளையின் செயல்பாடு பாதிக்கும் அபாயம்
கையடக்க தொலைபேசிகளில் சமூக ஊடகங்களை சில நிமிடங்கள் ஸ்க்ரோல் செய்வது மூளையின் செயல்பாடு மற்றும் செயல்திறனைக் குறைக்கும் என ஆய்வில், கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா கேலார்ட் மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 18 முதல் 25 வயதுடைய 27 பேர் இந்த ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். சமூக ஊடகங்களை விரைவாக ஸ்க்ரோல் செய்த 3 நிமிடங்களுக்குள் பங்கேற்பாளர்களின் ஆற்றல், மகிழ்ச்சி, கவனம் மற்றும் மன அழுத்த அளவுகள் மாறியதாக […]