செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 114 வயதுப் பெண் – ஆரோக்கியத்திற்கான காரணம் வெளியானது

  • November 1, 2024
  • 0 Comments

பென்சில்வேனியாவைச் சேர்ந்த 114 வயதுப் பெண் தான் வட அமெரிக்காவில் வாழும் மிக வயதான நபராகக் கருதப்படுகிறார். Naomi Whitehead என அழைக்கப்படும் குறித்த பெண் Greenville West Salem என்ற இடத்தில் வசித்து வருகின்றார். இதற்குமுன்னர் டெக்சஸைச் சேர்ந்த Elizabeth Francis என்ற பெண் மிக வயதான நபராக இருந்தார். அவர் கடந்த 22ஆம் திகதி காலமானார். இதையடுத்து வட அமெரிக்காவின் ஆக வயதான நபராக வைட்ஹெட் அடையாளம் காணப்பட்டுள்ளார். 1910ஆம் ஆண்டு பிறந்தவரான வைட்ஹெட் […]

ஐரோப்பா

புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏற்பட்ட கோளாறு : அவசரமாக தரையிறக்கப்பட்ட Ryanair விமானம்!

  • November 1, 2024
  • 0 Comments

டப்ளின் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Ryanair விமானம், “அழுத்தம் அமைப்பதில் சிக்கல்” ஏற்பட்டதால், ஐரிஷ் விமான மையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையால் விமானத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேர பயணத்தில் விமானம் சிக்கலை எதிர்கொண்டது. ஐரிஷ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள Ryanair  விமானத்தின் செய்தி தொடர்பாளர் டப்ளினில் இருந்து மாட்ரிட் செல்லும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்க தொலைபேசியில் சிறிய துளை இருப்பதற்கான காரணம்

  • November 1, 2024
  • 0 Comments

சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனின் வெளிப்பகுதி குறித்து எந்த அளவுக்கு நமக்கு தெரியும்? செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளை ஒன்றை கவனித்து இருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? சிலருக்கு தெரிந்திருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அதற்கான விடை தெரியாது. அந்த மிகச்சிறிய துளை நம் […]

ஆசியா

114 மைல் வேகத்தில் வீசிய காற்று : தைவானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!

  • November 1, 2024
  • 0 Comments

தைவானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியை தொடர்ந்து தலைநகர் தைபே பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காங்-ரே சூறாவளி இன்று தைவானில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக தீவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடக்குப் பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 114 மைல் வேகத்தில் காற்று வீசியதால் 8,600 பேர் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யிலான் மற்றும் ஹுவாலியன் மாவட்டங்களின் சில பகுதிகள் கனமழையால் […]

இந்தியா செய்தி

போலி மிரட்டல்களால் கடும் நெருக்கடி – அமெரிக்காவின் FBI உதவியை நாடும் இந்தியா

  • November 1, 2024
  • 0 Comments

இந்திய அரசாங்கம் போலி மிரட்டல்களால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் இந்த அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடியிருக்கிறது. இரண்டு வாரத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு 400க்கும் அதிமான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதற்கும் காலிஸ்தான் கேட்கும் சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. சமூக ஊடகத்தளங்களை வைத்துச் செய்யப்படும் தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களை அடையாளம் காண முயற்சித்துள்ளது. அதற்கமைய, இந்தியாவோடு சேர்ந்து பணியாற்றுவதாக அமெரிக்க […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் 100mm மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!

  • November 1, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (01) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வளிமண்டல நிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில்  100மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் கூகுள் நிறவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட அபராத தொகை – உலகின் மொத்த ஜிடிபியை விட அதிகம்!

  • November 1, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு இரண்டு அன்டிசில்லியன் ரூபிள்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அதாவது அன்டிசில்லியன் என்பது டிரில்லியன் மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் 110 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்ட உலகின் மொத்த ஜிடிபியை விட இந்த அபராத தொகை அதிகமாகும். கூகுளின் தற்போதைய பங்குச் சந்தை மதிப்பு $2.16 டிரில்லியன் ஆகும். எனவே எந்த நேரத்திலும் பணத்தைத் திரட்ட முடியாது எனக் கூறப்படுகிறது. அபராதம் செலுத்தப்படாததால் அதற்கான வட்டி அதிகரித்து வருவதாகவும் ஒன்பது […]

விளையாட்டு

ரிஷப் பண்ட்டுக்கு குறிவைக்கும் சி.எஸ்.கே!

  • November 1, 2024
  • 0 Comments

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்கும் காலக்கெடு நேற்று முடிவடைந்தது. சென்னை அணி கடந்த காலங்களில், முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. கழற்றி விட்ட வீரர்களை கூட ஏலத்தில் முன்வந்து வாங்கியது. ஆனால், தற்போது […]

உலகம் வட அமெரிக்கா

அமெரிக்க தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் மஸ்க் : விசாரணைக்கு அழைப்பு!

  • November 1, 2024
  • 0 Comments

எலான் மஸ்க் ஸ்விங் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு $1 மில்லியன் பரிசுகளை வழங்கியது தொடர்பாக  அவசர நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். டெஸ்லா மற்றும் எக்ஸ் தலைமை நிர்வாகி, பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் உள்ள ஒரு நீதிபதியால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தொழிலதிபரான எலான் மஸ்க் சட்டவிரோத லாட்டரியை நடத்தி, வாக்காளர்களை பாதிக்க முயன்றதாக வழக்கு குற்றம் சாட்டியுள்ளது. ஸ்விங் மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அமுலாகும் புதிய சட்டம் – கடவுச்சீட்டு, அடையாள அட்டை தொடர்பில் முக்கிய தகவல்

  • November 1, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, முதலாம் திகதி முதல் ஒருவர் கடவுச்சீட்டை அல்லது தனது அடையாள அட்டையையை ஜெர்மனியின் அலுவலகத்தில் இருந்து பெறுவதாயின் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு அத்தாட்சி பத்திரம் அல்லது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். கடவுச்சீட்டுக்கு அல்லது அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்கின்வர்கள் அலுவலகங்களுக்கு செல்லாமலே கடிதம் மூலமாக இந்த குறித்த சீட்டை தமக்கு அனுப்புமோறு கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடியும். எனினும் இந்த […]