ஐரோப்பா

வட கொரியா மீது நடவடிக்கை எடுக்க நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி கோரிக்கை

  • November 2, 2024
  • 0 Comments

வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வடகொரியத் துருப்புகள் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது தொடர்பில் நடவடிக்கை எடுத்து உதவுமாறு தமது நட்பு நாடுகளுக்கு உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். தமது நாட்டின் மீது வடகொரியத் துருப்புகளும் போர் தொடுப்பதற்கு முன் செயலில் இறங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். வடகொரியா அதன் ராணுவ ஆற்றல், ஏவுகணைப் பாய்ச்சல், ஆயுதத் தயாரிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக டெலிகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார். “இனி துரதிர்ஷ்டவசமாக நவீனப் போர்முறையையும் அவர்கள் […]

இலங்கை

இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைப்பு

  • November 2, 2024
  • 0 Comments

இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காய் சுமையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 76 கிலோ 300 கிராம் ஏலக்காய் மற்றும் 08 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 ஐ […]

உலகம்

22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • November 2, 2024
  • 0 Comments

எதிர்வரும் 6 மாதங்களுக்கு 22 நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என, ஐ.நா. ஆய்வு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. காலநிலை மாற்றம், போர் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் வரையிலும் பசிபிக் கடலில் லா நினா என்ற கடலியல் மாற்றம் இருக்கும் என்பதால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு வேளாண் பொருள் உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூடான், பாலஸ்தீன், ஹைதி, மாலி, லெபனான், மியான்மர், மொசாம்பி, நைஜீரியா, சிரியா, […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • November 2, 2024
  • 0 Comments

இலங்கையில் மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த […]

வாழ்வியல்

தூங்கி எழுந்தவுடன் கையடக்க தொலைபேசி பார்க்கும் பழக்கம் உள்ளதா? நிபுணர்கள் எச்சரிக்கை

  • November 2, 2024
  • 0 Comments

இன்றைய உலகில் போன் இன்றியமையாத பொருளாகி உள்ளது. எல்லா நேரமும், எல்லா இடத்திலும் மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இந்நிலையில், தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்க்கும் பழக்கமும் உருவாகி உள்ளது. இது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் ஜலந்தரில் உள்ள மன்ஜீத் சைனி மருத்துவமனையின் MD மனநல மருத்துவர், நிபுணர் டாக்டர் ஷுப்கர்மன் சிங் சைனி இந்தப் பழக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். இது NoMoPhobia (No Mobile […]

ஆசியா

சிங்கப்பூர் மக்களை மூளை தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை

  • November 2, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இன்னும் அதிகமானோர் மூளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளைக் கண்டறிய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலானோர் மூளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்கு மக்களிடம் விளக்கிச் சொல்லத் திட்டமிடப்படுகிறது. நரம்பியல் கோளாறுகள், அவற்றின் ஆய்வுகள் குறித்து எடுத்துச் சொல்லப்படும். ஐந்து ஆண்டுக்கு முன் “மூளை வங்கி” அமைக்கப்பட்டது. மரணத்துக்குப் பின் மூளையைத் தானம் செய்ய 380 பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை வங்கிக்கு 9 மூளைகளே கிடைத்துள்ளன. விரைவில் […]

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் வீட்டிற்குள் புகுந்த கும்பல் – சிக்கிய நபர்

  • November 2, 2024
  • 0 Comments

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டில் இந்த திருட்டு நடந்துள்ளது. திருடப்பட்ட போது தனது மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளும் உடனிருந்ததாக கிரிக்கெட் வீரர் குறிப்பிடுகிறார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளுக்கு போட்டியாக களம் இறங்கியது SearchGPT !

  • November 2, 2024
  • 0 Comments

கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக, ChatGPTல் இணையதள தேடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். கடந்த 2022ன் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. இது டிஜிட்டல் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை ஏற்படுத்தியது. இச்சூழலில் ChatGPT-ல் நிகழ்நேர தகவல்களை பெறும் வகையிலான தேடுதலை ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது. தற்போதைக்கு இதனை சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா எடுத்த தீர்மானம்

  • November 2, 2024
  • 0 Comments

உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உட்பட, 425 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரை மேலும் தீவிரமாக நடத்தும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பென்டகன் வெளியிட்ட அறிவிப்பில், வான் தடுப்பு ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கவச வாகனங்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள், டிரோன்களைத் தாக்கும் தளவாடங்கள், துப்பாக்கிகள், எதிரிப்படைகளைத் தாக்கி அழிக்கும் ஸ்டிரைக்கர் விமானங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ உதவி, போர்ப் பயிற்சி, போக்குவரத்து உதவி, ஆயுதப் […]

விளையாட்டு

ஜாஹிர் கானை பின்னுக்குத் தள்ளி அபார சாதனை படைத்த ஜடேஜா

  • November 2, 2024
  • 0 Comments

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரின் சுற்றுப் பயணம் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி இருக்கிறது. இதனால், ஆறுதல் வெற்றி நோக்கி இந்திய அணி 3-வது மட்டும் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியது. தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. அதில், இந்திய அணியில் சிறப்பாக […]