அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

தனிமை உலகிற்கு டிஜிட்டல் செயலி – ஜெர்மனி எடுத்துள்ள முயற்சி

  • November 3, 2024
  • 0 Comments

தற்போதைய ஸ்மார்ட் உலகில் , நாம் பாதுகாப்பானது என நினைத்து செல்போன் வாயிலாகவும், செல்போன் வைத்து கொண்டு அருகில் உள்ளவர்களிடம் நேரடியாக பேசினால் கூட சில சமயங்களில் நமது பேச்சுக்கள் செல்போன் மைக்ரோபோன் வழியாக ஒட்டுகேட்கப்படுகிறது. இதன் மூலம் பல சமயம் நாம் பேசிக்கொண்ட விஷயம் நாம் தேடும் சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரமாக வந்து சேர்வதை கவனித்திருபோம். சில சமயங்களில் செல்போன் கேமிராக்கள் கூட சில செயலிகள் மூலம் தவறாக கையாளப்படுகின்றன. இப்படி பாதுகாப்பற்ற சூழல் […]

வட அமெரிக்கா

அமெரிக்க தேர்தலில் வாக்களித்தால் Doughnut – பிரபல நிறுவனம் அறிவிப்பு

  • November 3, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் வாக்களிப்போருக்கு இலவசமாக Doughnut கொடுக்கவிருப்பதாக பிரபல அமெரிக்க Doughnut கடையான Krispy Kreme நிறுவனம், அறிவித்துள்ளது. வாக்களிப்புத் தினமனாக நேற்று அந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க ‘doughmocracy’ எனும் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கடைகளில் Original Glazed Doughnutகளை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்படுகின்றது.

செய்தி

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் மக்களுக்கு கடுமையாகும் சட்டம் – சிறைத்தண்டனை விதிக்கப்படும்

  • November 3, 2024
  • 0 Comments

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் மக்களுக்கு கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டம் நடப்புக்கு வருகிறது. அதற்கமைய, சைக்கிளோட்டும்போது அவர்கள் இனி கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது. ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது ஒரு லட்சம் யென் அபராதம் விதிக்கும் புதிய சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய போக்குவரத்து விதிகளின்படி, குடித்துவிட்டு சைக்கிள் ஓட்டினால், 3 ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் யென் அபராதமும், சைக்கிளை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஸ்பெயினை உலுக்கிய வெள்ளம் – மக்களுக்கு உதவ களமிறங்கிய 10,000 அதிகாரிகள்

  • November 3, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெலன்சியா நகருக்கு மேலும் 10,000 பொலிஸ் அதிகாரிகளும் படைவீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான வெள்ளப் பேரிடர் அங்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஸ்பேனிய அரசாங்கம் வெள்ளப் பேரிடரை முறையாகக் கையாளவில்லை என்று பரவலாகக் குறைகூறப்படுகிறது. வெள்ளத்தால் மாண்டோர் எண்ணிக்கை 211 க்கு உயர்ந்திருக்கிறது. சுமார் 2000 பேரை இன்னும் காணவில்லை. அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தொடங்கிய கனத்த மழையால் […]

இலங்கை செய்தி

இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • November 3, 2024
  • 0 Comments

இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு தொடர்பான 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதுளை, காலி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பைடன் அரசாங்கத்தின் திட்டம் – மிகப்பெரிய மோசடி என விமர்சித்த டிரம்ப்

  • November 3, 2024
  • 0 Comments

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தில் காலநிலை மாற்றம் என்ற கருத்தே மிகப்பெரிய மோசடி என டிரம்ப் விமர்சித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விஸ்கான்சனில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டிரம்ப், கால நிலை மாற்றத்தை விட அணு ஆயுதம் வைத்திருப்பவர்களால் தான் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாக கூறினார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உலக வெப்பமயமாதல் பற்றி பேசிவருகின்றார். இந்த நிலையில், அதற்கு நேர் மாறாக வெப்பநிலை தணிந்துவருவதாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் கோர விபத்தில் உயிரிழந்த மாணவிகள் தொடர்பில் வெளியான தகவல்

  • November 3, 2024
  • 0 Comments

பதுளையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளும் தலையில் பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவிகளில் ஒருவர் நிவிதிகல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இசுரி உமயங்கனி எனவும் மற்றைய மாணவி குருநாகல் பகுதியை சேர்ந்த தரங்க ஹெட்டிமுல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிரிழந்த மாணவிகளின் இறுதிக் கிரியைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் […]

இலங்கை செய்தி

இலங்கை: ஹெரோயின் பதுக்கி வைத்திருந்த தம்பதிகள் கைது

  • November 2, 2024
  • 0 Comments

செவனகல பிரதேசத்தில் மற்றுமொரு தம்பதியரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன், 53 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட அதிரடிப் பிரிவின் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது செவனகல கிரிவெவ பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய கணவன் மற்றும் 37 வயதுடைய மனைவி ஆகிய இரு சந்தேகநபர்களும் செவனகல நுகேகலயாய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மொரட்டுவ முகாம் நடத்தப்பட்டதாக […]

செய்தி விளையாட்டு

IPL Update – அடுத்த வருட தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

  • November 2, 2024
  • 0 Comments

18வது IPL கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் IPL நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி IPLலில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர […]

இலங்கை செய்தி

சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக சுனில் ஜயரத்ன நியமனம்

  • November 2, 2024
  • 0 Comments

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின்(CAA) தலைவராக தசுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். CAA இன் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் சுங்கத் திணைக்களத்தில் சுங்கத்தின் கூடுதல் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்தார். சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட அவர், கடந்த 3½ வருடங்களாக ஊடகப் பேச்சாளராகவும் இருந்துள்ளார். கூடுதலாக, ஜயரத்ன ஒரு அங்கீகாரம் பெற்ற நிபுணர் பயிற்சியாளர்/தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆலோசகர் ஆவார். உலக வர்த்தக அமைப்பின் (ஜெனீவா) வர்த்தக வசதி […]