இலங்கை மக்களை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்! ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மூட்டு இழப்பு
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இலங்கையின் நகர்ப்புற மக்களில் 23% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற மக்களில் 30% பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகளைக் காட்டுவதாக பொது சுகாதார நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன கூறுகிறார். இலங்கையில் நீரிழிவு நோயாளிகளின் மொத்த சதவீதம் 14% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நீரிழிவு நோயினால் இலங்கையில் ஒருவருக்கு ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு அங்கம் இழக்கப்படுவதாக டாக்டர் சாந்தி குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.