இலங்கை

இலங்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை! மக்களுக்கு எச்சரிக்கை

  • November 4, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் […]

செய்தி

நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த 4 நோய்கள் ஏற்படும் அபாயம்

  • November 4, 2024
  • 0 Comments

சில நேரங்களில், நாம் வேலை மற்றும் பிற செயல்பாடுகளில் மிகவும் பிஸியாக இருப்பதால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே ஓய்வு நாட்களில் நாம் அதிக நேரம் தூங்குவது வழக்கம். ஆனால் தூங்காமல் இருப்பதை போன்று அதிகமாக தூங்குவதும் உண்மையில் நமக்கும் கேடுதான்! இது சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதிகமாக தூங்குவது ஏன் நமக்கு நல்லதல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிகமாக தூங்கினால் உடல் எடை கூடும். நீங்கள் ஒவ்வொரு […]

செய்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி நுழைவதில் சிக்கல்

  • November 4, 2024
  • 0 Comments

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி […]

இலங்கை

இலங்கையில் கடவுச்சீட்டு வரிசையில் இடம் பிடிக்க 5000 ரூபா? திட்டமிட்டு இயங்கும் கும்பல்

  • November 4, 2024
  • 0 Comments

இலங்கையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசை உருவாகியுள்ளது. வரிசையில் முன்வரிசை இடத்தை வழங்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. தினசரி கிட்டத்தட்ட 2000 பேர் அந்த இடத்தில் வரிசையில் நிற்கிறார்கள் மற்றும் பெரும்பாலும் 1000 பேர் திகதியை பெற டோக்கன் கார்டைப் பெறுகிறார்கள். போதைக்கு அடிமையான சிலர் அதிகாலையில் இருந்து கியூவில் நின்று ஒரு இடத்தை பிடித்து பிற்பகலில் அந்த இடத்தை 5000க்கு விற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசியா செய்தி

சீனாவில் திருமணத்தை தவிர்க்கும் இளைஞர்கள் – சரிந்த திருமண பதிவுகள்

  • November 4, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவில் திருமண பதிவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிவில் விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, சீனா தனது குறைந்து வரும் மக்கள் தொகை அளவை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் நாடு முழுவதும் 4.747 மில்லியன் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆண்டுக்கு ஆண்டு 943,000 குறைவு என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நாடு […]

செய்தி

கூகுள் மேப்ஸ் மூலம் கிடைக்கும் நன்மைகள்

  • November 4, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற தேவையான பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய, அருகில் இருக்கும் கடைகள் அல்லது வழியில் காணும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் இப்பொழுது கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதாக, […]

செய்தி வட அமெரிக்கா

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் அகதிகளை தடுத்து நிறுத்துவேன் – டிரம்ப் அறிவிப்பு

  • November 4, 2024
  • 0 Comments

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியானால் அகதிகளை தடுத்து நிறுத்துவேன் என ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் தெரிவித்தள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தாம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை முன்னெப்போதையும்விட சிறப்பானதாகவும், துணிச்சலானதாகவும், பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவேன் என டிரம்ப் தெரிவித்தார். பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் என்று உறுதி அளித்தார். அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளை தடுத்து நிறுத்துவதுடன், வெளிநாட்டினரின் வருகையையும் கட்டுப்படுத்துவேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். பைடன் அரசால் கடந்த நான்கு ஆண்டுகளாக […]

செய்தி

வெள்ளத்தால் தத்தளிக்கும் ஸ்பெயின் மக்களுக்காக விமானப்படையினர் எடுத்த நடவடிக்கை

  • November 4, 2024
  • 0 Comments

ஸ்பெயின் மக்களுக்காக அந்நாட்டு விமானப்படையினர் ஒரு விமான மீட்புக்குழுவை அமைத்துள்ளனர். கடுமையான மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் ஸ்பெயினில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரின் 6 ஜெட் விமானங்கள் வானத்தில் சிவப்பு மஞ்சள் வண்ணப்பொடிகளைத் தூவி வேலன்சியா கொடியின் வர்ணத்தை வடிவமைத்து தங்கள் உதவியைத் தெரிவித்தன. ஸ்பெயின் வெள்ளத்தில் 211 பேர் உயிரிழந்து மேலும் பலரைக் காணவில்லை. வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன

செய்தி

பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் – 160 பேரை மீட்ட அதிகாரிகள்

  • November 4, 2024
  • 0 Comments

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய, 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 31 – நவம்பர் 1 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில் இச்சம்பவம் இரு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளது. முதலாவது சம்பவம் நோர்ட் மாவட்ட கடற்கரை வழியாக படகொன்றில் 57 பேர் பயணித்த நிலையில் அவர்களை பிரெஞ்சு கடற்படையினர் மீட்டுள்ளனர். அச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளை, மற்றுமொரு கடற்பிராந்தியம் வழியாக இரண்டு படகுகளில் 103 பேர் பயணித்துள்ளனர். அவர்களை பிரித்தானிய கடற்படையினர் மீட்டுள்ளனர். இவ்வருடத்தின் […]

செய்தி

வெளிநாடு நோக்கி சென்ற 240,109 இலங்கையர்கள்

  • November 4, 2024
  • 0 Comments

240,109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இந்த இலங்கையர்கள் வெளியேறியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவர்களில் 99,939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய 70,396 பயிற்றப்பட்ட பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.