இந்தியா

இந்தியாவில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து – 24 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

  • November 4, 2024
  • 0 Comments

வட இந்தியாவில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து இன்று (04.11) விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதியான அல்மோரா மாவட்டத்தில் இருந்து பயணித்த குறித்த பேருந்தில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று மாநில அரசு அதிகாரி வினீத் […]

ஐரோப்பா

குழந்தைகளை பெற்றுக்கொள்ள வினோதமான பாணியை பின்பற்றும் ரஷ்யா : 20000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை!

  • November 4, 2024
  • 0 Comments

விளாடிமிர் புடின், ரஷ்யப் பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதற்காக வினோதமான ‘ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ பாணியிலான முயற்சியைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய திட்டம் தேசிய அளவில் வெளிவருவதற்கு முன்னதாக மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள பெண் பொதுத்துறை ஊழியர்களுக்கு பாலியல் மற்றும் மாதவிடாய் பற்றிய நெருக்கமான கேள்வித்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆக்கிரமிப்பு என்று விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. நாள்பட்ட மக்கள்தொகை நெருக்கடியை மாற்றியமைக்க ரஷ்யா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கை : லிட்ரோ கேஸ் விலை தொடர்பில் வெளியான தகவல்!

  • November 4, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த மாதத்திற்கான காஸ் விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் இல்லை. எனவே, நவம்பர் 2024 மாதத்துடன் தொடர்புடைய தற்போதைய விலைகள் செல்லுபடியாகும்.

இலங்கை

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

  • November 4, 2024
  • 0 Comments

இலங்கை சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சுனில் ஜயரத்ன இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்கவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று (04) அவர் இந்தப் பணிகளை பொறுப்பேற்றுள்ளார். திரு.சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றியதோடு அதன் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார். சுமார் மூன்றரை ஆண்டுகள் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் கான்பெரா […]

ஆசியா

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி!

  • November 4, 2024
  • 0 Comments

கிழக்கு இந்தோனீசியாவின் லக்கி-லக்கி எரிமலை குமுறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறியதில் அக்கம்பக்க கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான குடியிருப்பாளர்கள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தின் ஃபுளோரெஸ் தீவில் அந்த எரிமலை உள்ளது.உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.57 மணிக்கு எரிமலை சீற்றமடைந்ததைத் தொடர்ந்து சிவப்பு நிற தீக்குழம்பு வெளியேறியது. அந்த வெடிப்பில் சாம்பலும் பாறைத் துகள்களும் பறந்து விழுந்தன. எரிமலை மற்றும் பூகோள ஆபத்துத் தணிப்பு மையத்தின் பேச்சாளரான […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கமலா ஹாரிஸ் முன்னிலையா? கடும் கோபத்தில் டிரம்ப்

  • November 4, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் ஜனாதிபதியை தேர்வு செய்யும் பெரிய தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இருவரும் தீவிரமாக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு யார் ஜனாதிபதியாக போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு முந்தியைக் கருத்துக் கணிப்புகளும் நடந்து முடிந்தது. அதில், டோனால்ட் டிரம்ப்க்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமெரிக்காவின் (Iowa) அயோவாவில் நடந்த கருத்துக் கணிப்பில் அவர் […]

உலகம் செய்தி

சர்வதேசச் சந்தையில்மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • November 4, 2024
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.30 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.509 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பொழுதுபோக்கு

நாளுக்கு நாள் எகிறும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.. அமரனின் ஆட்டம் ஆரம்பம்

  • November 4, 2024
  • 0 Comments

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், அவரது காதல் மனைவி இந்து ரெபேகா வர்கிஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் அமரன். இப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனது. அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கான புக்கிங் ஓபன் ஆனதில் இருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் […]

பொழுதுபோக்கு

நான்காவது நாளில் வசூல் சரிவை சந்தித்த ப்ளடி பெக்கர்…

  • November 4, 2024
  • 0 Comments

கவின், ராதா ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள முதல் படம் ப்ளடி பெக்கர். இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமாரிடம் நீண்ட காலமாக உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தில் கவின் பிச்சைக்காரராக நடித்துள்ளார். மேலும் இந்தக் கதாபாத்திரம் படம் தொடங்கி முதல் 30 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும் என்றாலும், […]

செய்தி

இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

  • November 4, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டவரி அண்மையில் 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 10 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 30 வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்தநிலையில், கேள்விக்கு ஏற்ற வகையில் பெரிய வெங்காயத்தின் கையிருப்பு சந்தையில் இல்லாததன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.