அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் முடக்கம் – login செய்ய முடியாமல் பயனர்கள் தவிப்பு

  • November 20, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் பிற பகுதிகளில் சில மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியது. லாக்கிங் பிரச்சனை, ஸ்டோரி அப்லோடு செய்வதில் பிரச்சனை, மெசேஜ் அனுப்ப முடியாமலும் பயனர்கள் தவித்தனர் . ஆன்லைன் சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இன்ஸ்டாகிராம் முடங்கியதாக காலை 10:37 மணியளவில் சுமார் 700 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வாரத்தில் […]

இந்தியா செய்தி

மனைவியைப் பிரியும் ஏ.ஆர். ரஹ்மான்! மகன் விடுத்த கோரிக்கை

  • November 20, 2024
  • 0 Comments

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானும் அதனை உறுதி செய்துள்ளார். “நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் […]

இலங்கை செய்தி

இலங்கை முழுவதும் பலத்த மழை – காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • November 20, 2024
  • 0 Comments

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் […]

விளையாட்டு

விதிகளை மீறிய தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளருக்கு அபராதம்!

  • November 20, 2024
  • 0 Comments

ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு தெரிவித்ததற்காக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரின் சதத்தால் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்தியப் பெண் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • November 20, 2024
  • 0 Comments

இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பெண், கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரி அடுப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கில், வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கனடா பொலிஸார் விளக்கம் கொடுத்துள்ளனர். ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் 19 வயதான குர்சிம்ரன் கௌர் என்ற 19 வயது பெண், சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகின்றது. இந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய டிரம்ப் மீதான வழக்கு தொடரும்

  • November 20, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெர்வுசெய்யப்பட்ட டொனல்ட் டிரம்ப் மீதான வர்த்தகக் கணக்கு முறைகேட்டு வழக்கை கைவிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் அரசாங்க வழக்கறிஞர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக ஜனாதிபதியான அவரது இரண்டாம் தவணைக் காலம் முடியும் வரை தீர்ப்பை ஒத்திவைக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். டிரம்ப் ஜனாதிபதியாகியதால் அவர்மீதுள்ள வழக்கைக் கைவிடவேண்டும் என்று அர்த்தமாகிவிடாது என்று மென்ஹாட்டன் (Manhattan) வட்டார தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது. டிரம்ப் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்படும் […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

உலகிலேயே அதிக காற்று மாசுபாடான நகரமாகிய புதுடெல்லி – வெளியான அதிர்ச்சி தகவல்

  • November 20, 2024
  • 0 Comments

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் காற்று மாசுபாட்டிற்கமைய, ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவு சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக காற்று மாசு உள்ள நகரமாக புதுடெல்லி இருப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்றின் தரக் குறியீட்டின் சராசரி காற்றின் தர மதிப்பு 100-க்கும் குறைவாக இருக்க வேண்டும், ஆனால் டெல்லியில் 1000ஐத் தாண்டும் அபாயகரமான நிலையை எட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நச்சு […]

இலங்கை செய்தி

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

  • November 20, 2024
  • 0 Comments

இலங்கையில் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவை அதிகளவு பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். “சிறுவர்களிடையே இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி போன்ற வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் தென்படுகின்றன. சிறுவர்களிடையே குறிப்பாக காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், நோய் அறிகுறிகளை உன்னிப்பாகக் அவதானித்து பெற்றோர்கள் வைத்தியர் உதவியை நாட வேண்டும். தற்போது பாடசாலை மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் […]

செய்தி

இலங்கைக்கு எதிரான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு

  • November 19, 2024
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் […]

செய்தி

ரஷ்யா மீது அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்திய உக்ரைன்

  • November 19, 2024
  • 0 Comments

ரஷியா- உக்ரைன் இடையில் சண்டை நடைபெற்று ஆயிரம் நாட்களை தாண்டியுள்ளது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டது. ஆனால் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க தடைவிதித்திருந்தது. ஜனவரி 20ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியில் இருந்து வெளியேற இருக்கிறார். அதற்கு முன்னதாக உக்ரைனுக்கு உதவும் வகையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை […]