இஸ்ரேல் இராணுவத்திற்கு இராட்சத குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா
இஸ்ரேல் இராணுவத்திற்கு இராட்சத குண்டுகளை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. தலா 2,000 பவுண்டு எடையிலான குண்டுகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கி பிடித்து வாழ்ந்துவரும் காஸாவில் அவை வீசப்பட்டால் அதிக உயிர் சேதம் ஏற்படக்கூடும். இந்த ஆபத்தை கருதி, MK-84 என்றழைக்கப்படும் 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க ஜோ பைடன் தடை விதித்திருந்தார். தற்போதைய ஜனாதிபதி டொனால் டிரம்ப் அந்த தடையை நீக்கியுள்ளார்.