ஐரோப்பா

ஸ்பெயின் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ள 89 பேர் : துரித கதியில் இடம்பெறும் மீட்பு பணிகள்!

  • November 7, 2024
  • 0 Comments

வலென்சியா வெள்ளத்தைத் தொடர்ந்து குறைந்தது 89 பேரைக் காணவில்லை என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் பணி ஒன்பதாவது நாளாகத் தொடங்கிய நிலையில், நகரின் துரியா நதியை சுற்றி தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. த்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை நேற்று இரவு 217 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூன்று பிரித்தானியர்களும் அடங்குவர்.  மேலும் 400,000 பேர் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

எனது போராட்டம் முடியவில்லை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின் கமலா

  • November 7, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தல் முடிந்தாலும் எனது போராட்டம் முடியவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயற்பட்ட கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஹோவர்ட் (Howard) பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நிறைவுக்கு வந்தாலும் தமது போராட்டம் முடிவுறவில்லை என்று ஹாரிஸ் அவரது ஆதரவாளர்களிடம் கூறினார். அவரின் ஆதரவாளர்கள் பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். பெண்களின் உரிமை, துப்பாக்கி வன்முறைக்கு எதிரான போராட்டம், கண்ணியம் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து போராடப்போவதாக அவர் உறுதியளித்தார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள […]

செய்தி

இலங்கை பொதுத் தேர்தல் : நிறைவு பெறும் பிரசார நடவடிக்கைகள் – வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!

  • November 7, 2024
  • 0 Comments

இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு வரும் 14-ம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் […]

செய்தி

AI தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதன் சாதக பாதகங்கள்

  • November 7, 2024
  • 0 Comments

தொழில்நுட்பம் நம் அனைவரது வாழ்விலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வருகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கல்வித்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் தங்கள் கற்றல் செயல்பாட்டில் AI கருவிகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைப்பதுடன், சில சவால்களும் எழுகின்றன. இந்தப் பதிவில், AI தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். நன்மைகள்: AI அடிப்படையிலான கற்றல் தளங்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட கற்றல் வேகம் மற்றும் பாணியைப் […]

மத்திய கிழக்கு

லெபனானில் முதல் முறையாக குறிவைக்கப்பட்ட நகரம் : 30 பேர் உயிரிழப்பு!

  • November 7, 2024
  • 0 Comments

லெபனானின் பர்ஜா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த தாக்குதல் முன் எச்சரிக்கை எதுவும் இன்றி நடத்தப்பட்டதாக கூறப்படுவதுடன், இது தொடர்பில் இஸ்ரேல் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய லெபனானில் உள்ள துறைமுக நகரமான சிடானுக்கு வடக்கே உள்ள பார்ஜா என்ற நகரம், மோதலில் இதுவரை தொடர்ந்து குறிவைக்கப்படவில்லை. தற்போது முதல் […]

விளையாட்டு

IPL 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஆண்டர்சன்! குறி வைக்கும் சென்னை?

  • November 7, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் அடங்குவார்கள். இதில், ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 42 வயதான இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தங்களது அவரது பெயரைப் பதிவு செய்துள்ளார். சர்வதேச […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் நியமனம் – முன்பை விட இலங்கைக்கு சிக்கல்

  • November 7, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரது வரவு தொடர்பில் உலக நாடுகள் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையின் ஆட்சியைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இலங்கையில் முன்னைய நிலைமையை விட சிக்கலான நிலைமை ஏற்படும் […]

உலகம்

கமரூனில் மண்ணில் புதையுண்ட பேருந்துகள் : 50 பேர் மாயம்!

  • November 7, 2024
  • 0 Comments

கமரூனின் மேற்கில் மூன்று பயணிகள் பேருந்துகள் மற்றும் பல சாலைப் பணியாளர்கள் நிலச்சரிவில் சிக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 50 இற்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்ட நிலையில் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த மழையினால் மண் வலுவிழந்து நிலச்சரிவு ஏற்பட்டதாக கேமரூனின் பொதுப்பணித்துறை அமைச்சர் இம்மானுவேல் நாகனு ஜூமெஸ்ஸி தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மேற்கு ஆபிரிக்கா இந்த ஆண்டு பல […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க தேர்தலில் தோல்வி! ஆதரவாளர்களிடம் பேச தயாராகும் கமலா ஹாரிஸ்!

  • November 7, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாகியுள்ளார். தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இது இவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கான வெற்றியாளர் ட்ரம்ப் என அறிவித்தபோது கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் கண்கலங்கி அழுதார்கள். தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், கமலா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூட எந்த பதிவும் பதிவு செய்யவில்லை. தோல்வி குறித்தும் […]

வட அமெரிக்கா

டிக்டொக் சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் கனேடிய அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!

  • November 7, 2024
  • 0 Comments

டிக்டொக் சமூக ஊடக பயன்பாட்டிற்குப் பின்னால் உள்ள சீன நிறுவனத்தின் தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வுக்குப் பிறகு அதன் கனேடிய வணிகத்தை கலைக்க உத்தரவிடுவதாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும் அணுகலை தடுக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது “டிக்டோக் பயன்பாட்டிற்கான கனடியர்களின் அணுகலையோ அல்லது உள்ளடக்கத்தை உருவாக்கும் திறனையோ அரசாங்கம் தடுக்கவில்லை. சமூக ஊடக பயன்பாடு அல்லது தளத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவு தனிப்பட்ட விருப்பமாகும்” என்று தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் கூறியுள்ளார். கனேடியர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் […]