கறுப்பு ஜூலை தினத்தில் இலங்கை அரசாங்கம் வடக்கிற்கு அனுப்பிய விசேட ரயில் ஒரு ‘நாடகம்’
கறுப்பு ஜூலையின் 42ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்ற தினத்தில், தற்போதைய அரசாங்கத்தின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வேடிக்கையான பயணத்தை மேற்கொண்டதை வடக்கிலுள்ள ஒரு தமிழ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு முழுவதும் அரச ஆதரவுடன் படுகொலை செய்யப்பட்ட 3,000ற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, வடக்கு மற்றும் கிழக்கிலும், கொழும்பு, பொரளையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நினைவேந்தல் நிகழ்வில் “போலி சகோதரத்துவ நாள் வேண்டாம்!” என்ற வாசகங்கள் […]