இலங்கை

03 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட யானை : இலங்கையில் சம்பவம்!

  • November 10, 2024
  • 0 Comments

புத்தளம் மாவட்டத்தின் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணற்றில் வீழ்ந்த காட்டு யானையை இந்த வாரம் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளனர். மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட யானை காட்டிற்குள் விடப்படதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்திய தூதுவர் அழைப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான சுற்றுலாத் தொடர்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடக்க தெற்காசிய சுற்றுலா தலைமைத்துவ மன்றத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் சுற்றுலாத் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான அதன் ஆற்றலையும் வலியுறுத்தினார். “2023 ஆம் ஆண்டில், இலங்கைக்கு வருகை தந்தவர்களில் சுமார் 20% பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்,” என்று அவர் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளும் உறவுகளை […]

இலங்கை

“ஜே.வி.பி இலங்கை மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – ரணில்

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி மலையக சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நான் உரையாற்றும் முதலாவது சந்திப்பு இதுவாகும். நாங்கள் வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டாலும், நுவரெலியாவில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்” என கொட்டகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் தொடர்பில் ரஷ்யா எடுத்துள்ள தீர்மானம்!

  • November 10, 2024
  • 0 Comments

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏனைய நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின் பரிசீலிக்கப்படும் என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் என்ற வகையில் ரஷ்யா, இலங்கையின் விண்ணப்பத்தை வரவேற்பதாகவும், அது நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற சமீபத்திய உச்சிமாநாட்டில், பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்கான கோரிக்கையை இலங்கை பதிவு செய்தது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஒடிசா அரசு

ஒடிசா மாநில அரசு, கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி இவ்வாறு முடிவெடுத்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டுப் பட்டப் படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலைப் […]

உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படும் சலுகை ஒன்றை நிறுத்தும் பிரபல நாடு!

  • November 10, 2024
  • 0 Comments

புலம்பெயர்ந்தோருக்கு உணவுக்காக  வழங்கப்படும் வவுச்சர்களை நிறுத்துவதற்கு நியூயார்க் நகரம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேயர் எரிக் ஆடம்ஸ், பைலட் திட்டம், நகரத்தின் நிதியுதவி பெற்ற ஹோட்டல்களில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு டெபிட் கார்டுகளை விநியோகித்தது. அவர்கள் தங்கள் சொந்த உணவை வாங்க அனுமதித்தது. மார்ச் மாத இறுதியில் இருந்து, நகரம் ஹோட்டல்களில் வசிக்கும் சுமார் 2,600 புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மொத்தம் $3.2 மில்லியன் மதிப்பிலான ப்ரீபெய்ட் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் […]

வட அமெரிக்கா

கனடாவில் முதன்முறையாக ஒருவருக்குப் பறவைக் காய்ச்சல்

  • November 10, 2024
  • 0 Comments

கனடாவில் மனிதர் ஒருவருக்கு H5 பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளது. இது அந்நாட்டின் முதல் சம்பவம். மேற்கு கனடிய மாநிலமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதின்ம வயது இளைஞரிடம் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 9) கூறினர். பறவை அல்லது விலங்கிடம் இருந்து அவருக்குத் தொற்று பரவி இருக்கக்கூடும் என்று மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்தது.குழந்தைகளுக்கான மருத்துவமனையில் அந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது. அவருக்குப் பறவைக் […]

ஐரோப்பா

மாஸ்கோவில் உக்ரைனின் மிகப்பெரிய தாக்குதலில் டஜன் கணக்கான ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா

  • November 10, 2024
  • 0 Comments

உக்ரேன், ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) மாஸ்கோவை நோக்கி 25 வானூர்திகளைப் பாய்ச்சித் தாக்குதல் நடத்தியது. அதன் காரணமாக மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களில் இரண்டை மூட நேரிட்டது என்று ர‌ஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவே ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரேன் நடத்தியிருக்கும் ஆகப் பெரிய வானூர்தித் தாக்குதலாகும். மாஸ்கோவின் ராமஸ்கோய, கொலொமென்ஸ்கி வட்டாரங்களில் அந்த வானூர்திகள் அழிக்கப்பட்டதாக அந்நகர மேயர் செர்ஹெய் சொப்யானின் கூறினார். மாஸ்கோவின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 21 மில்லியனுக்கும் அதிகமாகும். “முதலில் எங்களுக்குக் […]

இலங்கை

இலங்கை பொதுத் தேர்தல் : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எடுத்துள்ள நடவடிக்கை!

  • November 10, 2024
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசேட பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக அதன் பணிப்பாளர் திரு.பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். இதன்படி, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும், தேர்தலுக்குப் பின்னரும் 05 நாட்களுக்கு தேர்தல்கள் செயலாளர் நாயகம் அலுவலகத்துடன் இணைந்து இந்த விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக  பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.

இலங்கை

இலங்கை: அறுகம்பை தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விசேட கவனம்

பாதுகாப்பு செயலாளர் இன்று (நவம்பர் 10)கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அறுகம் குடா பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளார். இந்த விஜயத்தின் போது, ​​பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூர் சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போதைய திட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதற்கமைவாக, பிரதேசத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், தீவின் ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் […]