ஆசியா இன்றைய முக்கிய செய்திகள்

விமானம் தாங்கி கப்பலை உருவாக்கி வரும் சீனா : அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்!

  • November 11, 2024
  • 0 Comments

பெய்ஜிங் தனது முதல் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலை தயாரிப்பதை நோக்கி முன்னேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதனை சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளன. சீனாவின் கடற்படை ஏற்கனவே உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளது, மேலும் அது வேகமாக நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அணுசக்தியால் இயங்கும் கேரியர்களை அதன் கடற்படையில் சேர்ப்பது, அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையில் உள்ள சவால்களை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. “அணுசக்தியால் இயங்கும் கேரியர்கள் சீனாவை முதல்தர கடற்படை […]

இலங்கை

இலங்கை பொதுத் தேர்தலில் கொண்டுவரப்படவுள்ள புதிய மாற்றம்!

  • November 11, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் குறியீடாக இடது கையின் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை விளக்கினார். “கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கை மோதிர விரலுக்கு கலர் அடித்தோம். பலருக்கும் இப்படித்தான் குறி வைத்துள்ளனர். அதனால், இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறி வைக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.” நவம்பர் 14ஆம் திகதி […]

பொழுதுபோக்கு

“இனிமேல் என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்” – கமல் ஹாசன் எடுத்த திடீர் முடிவு!

  • November 11, 2024
  • 0 Comments

“இனிமேல் என்னை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்” என்று நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். அதில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ராஷ்டிரபதி பவன் விருதும் பெற்றார் அவர். அன்று தொடங்கிய அவரின் திரைப்பயணம், தற்போது அவரது 70வது வயதிலும் நிற்காமல் நீடிக்கிறது. அந்தவகையில் பல்வேறு அசத்தலான கதாபாத்திரங்களில் நடித்து, சினிமாதான் […]

ஆப்பிரிக்கா

கேரி கானலை பதவியில் இருந்து நீக்கிய ஹெய்ட்டி ஆட்சிக்குழு : எழுந்துள்ள புதிய சிக்கல்!

  • November 11, 2024
  • 0 Comments

ஹெய்ட்டியின் ஆட்சிக் குழு, கேரி கானலை அவரது பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. சபையின் 9 உறுப்பினர்களில் 8 பேரின் கையொப்பத்துடன் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கானலுக்குப் பதிலாக பிரபல தொழிலதிபரும் ஹைட்டி செனட் வேட்பாளருமான அலிக்ஸ் டிடியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியான கானெல், நாட்டின் பாதுகாப்பு நிலைமையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் ஹைட்டியின் பிரதமராக நியமிக்கப்பட்டார். நாட்டில் வீதி மோதல்கள் மற்றும் பல்வேறு ஆயுதக் கும்பல்களுக்கு இடையில் மோதல்கள் பரவி வருவதால் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல்கலைகழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 16 பேர் காயம்

  • November 11, 2024
  • 0 Comments

தெற்கு அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டஸ்கேகி பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று பல்கலைக்கழகம் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் அல்ல என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “டஸ்கேகி பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து ஓபிலிகாவில் உள்ள கிழக்கு அலபாமா மருத்துவ மையம் மற்றும் மாண்ட்கோமரியில் உள்ள பாப்டிஸ்ட் சவுத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” […]

பொழுதுபோக்கு

ரஜினி, கமல், விஜய் வரிசையில் இடம்பிடித்த சிவகார்த்திகேயன்

  • November 11, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களே டாமினேட் செய்து வரும் நிலையில், தற்போது இவர்களின் வசூல் கோட்டைக்குள் சிவகார்த்திகேயனும் நுழைந்துள்ளார். சினிமாவில் முன்னணி நடிகர்களைத் தீர்மானிப்பது அவர்களின் படங்களின் முதல் நாள் ஓபனிங், அப்படத்தின் ஓவர் சீஸ் வசூல், டிக்கெட் புக்கிங், சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் இதெல்லாம்தான் தீர்மானிக்கிறது. இதை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் செய்து வருகின்றன. குறிப்பாக தமிழ் சினிமாவின் பென்ச் மார்க்காக ரஜினி […]

இலங்கை

பொதுத் தேர்தலை தொடர்ந்து கூட்டப்படும் பாராளுமன்றம் : இடம்பெறவுள்ள பல விசேட நிகழ்வுகள்!

  • November 11, 2024
  • 0 Comments

புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என  பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலிலிருந்து 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் முதல் நாளில் பல சிறப்பு நடவடிக்கைகள் […]

மத்திய கிழக்கு

லெபனான் பேஜர் தாக்குதல்கள்: அனுமதி அளித்ததை ஒப்புக்கொண்ட பிரமர் நெதன்யாகு

  • November 11, 2024
  • 0 Comments

கடந்த செப்டம்பர் மாதம், ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்திய பேஜர் கருவிகளின் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தாம் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) தெரிவித்தார். அந்தத் தாக்குதல்களில் தாங்கள் ஈடுபட்டதை இஸ்ரேல் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அந்தத் தாக்குதல்களுக்குத் தங்களின் பரம எதிரியான இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா முன்னதாகக் குற்றஞ்சாட்டியது. ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கு அந்தத் தாக்குதல்கள் பெரும் பின்னடைவாக அமைந்தது.அதற்குப் பதிலடி தரப்படும் என்றும் ஹிஸ்புல்லா உறுதியளித்தது. […]

இலங்கை

கொழும்பில் நடந்த சோகம் – தந்தையின் வாகனம் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

  • November 11, 2024
  • 0 Comments

மருதானை – புகையிரத ஊழியர்களுக்கான வீட்டுத் தொகுதியில் சிறு குழந்தையொன்று ஜீப்பில் நசுங்கி உயிரிழந்துள்ளது. ஜீப் ஒன்று வீடொன்றுக்கு அருகில் நிறுத்தச் சென்ற போது, ​​இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருதானை பகுதியில் உள்ள புகையிரத வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 3 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று பிற்பகல் வீட்டுக்கு அருகில் ஜீப் வாகனத்தை நிறுத்துவதற்கு தந்தை பின்பக்கத்திற்கு வாகனத்தை செலுத்திய வேளையில், பின்னால் வந்த அவரது குழந்தை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்

  • November 11, 2024
  • 0 Comments

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை நேற்று காலை வந்தடைந்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய கடற்படையால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளமானதாகும். இந்த நீர்மூழ்கியில் 53 பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் நாட்டின் முக்கியத்துவம் மிக்க பல இடங்களைப் பார்வையிடவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, ​​இரு நாட்டு கடற்படைகளுக்கு […]