Site icon Tamil News

சைக்கிளில் வேலைக்குச் சென்றால் ஊக்கத் தொகை – ஐரோப்பிய நாடு ஒன்றின் புதிய திட்டம்

பெல்ஜியம் நாட்டில் சைக்கிளில் வேலைக்குச் செல்வோருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் திகதியில் இருந்து இந்த நடவடிககை நடப்புக்கு வந்துள்ளதாக செய்தி வெளியாகியு்ளளது.

தனியார் நிறுவனங்களும், தொழிற் சங்கங்களும் ஜனவரியில் ஓர் உடன்பாடு செய்துகொண்டன. அதன் ஓர் அங்கமாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

சைக்கிளில் வேலை இடத்துக்குச் செல்லும்போது ஒரு கிலோமீட்டருக்கு 0.30 டொல் வழங்கப்படும். அதற்கு வரி விதிக்கப்படாது.

ஒரு நாளில் 40 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லலாம். மாதச் சம்பளத்துடன் அந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.

பாரம்பரிய சைக்கிள்கள் மட்டுமல்ல, மின்-சைக்கிள், ‘Speed pedelec’ ஆகியவற்றை ஓட்டினாலும் ஊக்கத் தொகை பெறலாம்.

Exit mobile version