மேற்குலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் பெலாரஸ் : பின்னணியில் ரஷ்யா!
பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் ரஷ்யாவின் அணுவாயுதங்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்றாலும், தங்கள் நாட்டை ஆக்கிரமிக்க முற்பட்டால் அணுவாயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவரது அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுளு்ளது.
உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகும். இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அந்நாட்டில் அணுவாயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
இது மேற்குலக நாடுகளுக்கு வெளிப்படையான எச்சரிக்கையாக அமைந்தது. தற்போது இந்த கூட்டணியில் வடகொரியாவும் இணைந்துள்ளது. ஆகவே உலகிற்கு மிகப் பெரிய சவால் காத்திருப்பதாக அரசியல் விமர்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.