பாகிஸ்தான் அணித்தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!
பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைமை பதவியிலிருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட ஆட்டத்தை மேம்படுத்தும் விதமாகக் குறித்த தலைமை பதவியிருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவர் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த ஆண்டு அவரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைவராக மீண்டும் நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)